தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பதாக வந்த புகார் தொடர்பாக விவி மினரல் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ள மணல் குவாரிகளி்ல் சிறப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக தாது மணல் குவாரிகள், கல்குவாரிகள் நடைபெறுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் ஆசிஷ்குமார் கடந்த 6ம் தேதி அதிரடி சோதனை நடத்தினார். அதே நாளில் அவர் அதிரடியாக மாற்றப்பட்டார். இந்நிலையில், தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து வருவாய் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான 6பேர் குழுவினர் ஆகஸ்ட் 12 அன்று ஆய்வுப் பணிகளை தொடங்கினர். இதுகுறித்து ககன்தீப்சிங் பேடி செய்தியாளரிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பதாக வந்த புகார் பற்றி ஆய்வு மேற்கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு படி குழு ஆய்வு எனது தலைமையிலான குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் எடுப்பதற்காக குத்தகை விடப்பட்டுள்ள 6 பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் சம்பந்தபட்ட மணல் குவாரிகளில் சோதனை நடத்துவர், மேலும் அப்பகுதி மக்களிடம், மீனவர்களிடம் கருத்து கேட்பார்கள். இந்த ஆய்வு இன்று (ஆகஸ்ட் 12) முதல் 14ம் தேதி வரையிலும், அதன்பிறகு 19ம் தேதியில் இருந்து 20ம்தேதி வரையிலும் நடைபெறும். இதற்காக இன்னும் 3 வாரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில தங்கியிருப்பேன். இன்னும் ஒரு மாதத்திற்கு இதுதொடர்பான அறிக்கையினை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பேன் என்றார்.
இந்த சிறப்பு குழுவினர் வைப்பார், கலைஞானபுரம் அருகே உள்ள கடற்கரைப் பகுதியில் விவி மினரல்ஸ் மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அந்நிறுனம் குத்தகைக்கு எடுத்துள்ள இடத்தில் அளவு கற்களை சரிபார்த்தனர். பின்னர், குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் மட்டும் மணல் அள்ளப்பட்டதா? அல்லது விதிமுறைகளை மீறி வேறு பகுதிகளில் மணல் அள்ளப்பட்டதா என ஆய்வு மேற்கொண்டனர்.
தகவல்:
www.tutyonline.com
|