காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஆகஸ்ட் மாத சாதாரண கூட்டம் - ஆகஸ்ட் 16, வெள்ளிக்கிழமை அன்று மாலை 3 மணி அளவில் நடைபெறும். இக்கூட்டத்தில் 42 பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளன.
கூட்டத்தில் இடம்பெற்றுள்ள பொருட்கள் விபரம் வருமாறு:
தகவல்: ஐ. ஆபிதா சேக்,
நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
2. நகராட்சியில் கற்புடையார் பெயர் மாற்றம் posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[15 August 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 29486
நமது ஊர் மக்கள் ஒன்றுகூடி, நமது நகராட்சி பதிவேடுகளில் இருப்பது போன்று கற்புடையார் வட்டம் மற்றும் கடையக்குடி என்று அனைத்து அரசு மற்றும் நகராட்சி ஆணைகளில் அறிவிக்க வேண்டும். பெயர்பலகைகள் அந்த பெயர்களில் இருக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம். மேலும் நகராட்சியின் மாத கூட்டத்திலும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
நிலைமை இவ்வாறிருக்க, நகராட்சியின் இந்த மாத தீர்மானத்திற்கான கூட்ட பொருள் எண் 12 மற்றும் 18 ஆகியவைகளில் சிங்கிதுறை என்று குறுப்பிடபட்டுள்ளதே. அந்த பெயர்களில் கூட்ட பொருளில் வைக்கும் முன்வடிவுக்கு தலைவி அவர்களும் கையொப்பம் இட்டுள்ளார்களே, அப்படியென்றால் நகராட்சியில் சிங்கிதுறை மற்றும் கொம்புதுறை என்று பெயர் மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றி விட்டார்களா? அல்லது ஆணையர் மற்றும் தலைவி அவர்களின் சதி செயலா?
நான் இப்படி கருத்து பதிவு செய்வதற்காக தலைவியின் ஆதரவாளர்கள் மனது புண்பட வேண்டாம். அந்த பெயர்கள் குறிப்பிடுவதற்கு தலைவி அவர்களுக்கு உடன்பாடு இல்லையன்றால், அந்த தீர்மான முன்வரைவில் திருத்தம் செய்தால்தான் ஒப்பம் இடுவேன் என்று உறுதியாக இருக்க வேண்டும்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிமேல் அந்த மாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவர் மீதும் கடமை.
தீர்மான முன்வரைவு எண் 28 படி மகுதூம் ஜும்மா பள்ளி மையவாடியில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்க புதிய குழாய் அமைக்க நிதி ஒதுக்க அனுமதி வேண்டி. குழாய் அமைப்பது இருக்கட்டும். அந்த நீர்தேக்க தொட்டி அமைத்து 3-4 வருடங்கள் இருக்கலாம். நம் சட்டமன்ற உறுப்பினரும் பார்வையிட்டு, தண்ணீர் திறந்து விடப்படும் என்று உறுதி அளித்து 3-4 மாதங்கள் இருக்கும். ஆனால் அந்த தொட்டியில் இருந்து பயன் பெறும் மக்கள், இலவு காத்த கிளி போல் காத்திருக்கின்றனர். என்று தான் தண்ணீர் வருமோ என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் அந்த பகுதிவாசி.
3. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பாம்பு posted byAbdul Wahid S. (kayalpattinam)[15 August 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 29496
நமதூரில் மரைக்காயர் பள்ளி தெரு என்றோ அல்லது ஆசாத் தெருவேன்றோ அரசு ஆவணத்தில் எந்த தெருவும் இல்லை. கடற்கரை தெரு, துஷ்டராயர் தெரு என்று தான் உள்ளது.
சில தனி மனிதர்கள் கூட சில தெருக்களுக்கு தங்களுடைய பெயர்களையும் சில குடும்பத்தினர் தங்கள் குடும்ப பெயருடன் "நகர்" என்றும் தங்கள் விருப்பப்படி பெயர் வைத்திருக்கிறார்கள். நகராட்சியில் இந்த பெயர்கள் வைப்பது விசயமாக எந்த தீர்மானக்களும் நிறைவேற்றவில்லை. எந்த அரசு ஆவணத்திலும் அத்தகைய பெயர்கள் இருப்பதாக தகவல் இல்லை.
கடையக்குடி, கற்புடையார் வட்டம் விசயத்தில் சதிசெய்யும் தலைவி ஒருவேளை கடற்கரைத் தெரு (மரைக்காயர் பள்ளி தெரு), துஷ்டராயர் தெரு (ஆசாத் தெரு) விசயங்களிலும் குறிப்பாக மேற்கண்ட தெரு, நகர் விசயத்திலும் (பணக்காரர்களுடன் சேர்ந்து) சதி செய்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அவ்வாறு அவர் சதி செய்யவில்லை என்றால் அரசு ஆவணங்க்களில் இல்லாத பெயர்களை காவல் துறை உதவியுடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு கருத்தாளர் எழுதியது மாதிரி மக்கள் போராட்டம் செய்யவேண்டியதுதான்.
ஒரு வேலை அண்ணா சாலை (மவுண்ட் ரோடு) விசயத்திலும் நம் தலைவி சதி செய்கிறாரோ!
Food for Thought.
சென்னை மாநகரின் முக்கிய வீதிகளில் ஒன்று அண்ணா சாலை. மவுண்ட் ரோடு என்றிருந்த பெயரை பல வருடங்களுக்கு முன் (ஒரு தலைமுறைக்கு முன்) அண்ணா சாலை என்று அரசாங்கமே எல்லா அரசு ஆவணங்களிலும் மாற்றிவிட்டது. ஆனால் இன்று வரை (பெரியவர்கள் முதல் கொண்டு சிறுவர்கள் வரை) எல்லோருமே மவுண்ட் ரோடு என்றுதான் அழைக்கிறார்கள். அரசியல் வாதிகள் மட்டும் பொது மேடையில் பேசும்போது அண்ணா சாலை என்று குறிப்பிடுகிறார்கள்.
4. அன்றும் இன்றும். posted byAbdul Wahid S. (Kayalpattinam)[15 August 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 29498
Ref: பொருள் எண் 34
கடற்கரை தெரு (மரைக்கார் பள்ளி தெரு) அப்பா பள்ளி தெரு, பரிமார் தெரு, அலியார் தெரு, கே.டி. எம். தெரு இவை அனைத்தும் முடியக் கூடிய ரோடுதான் போஸ்ட் ஆபிஸ் ரோடு என்று அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த ரோடு.
ரெட் ஸ்டார் சங்க உறுப்பினர் என்ற முறையில் இந்த ரோடுக்கு ரெட் ஸ்டார் சங்கம் ரோடு என்று பெயர் மாற்றம் செய்ய நகராட்சியில் தீர்மான நிறைவேற்றப் பட்டு எதிர்ப்பு இல்லாமல் அவ்வாறு அழைக்கப்பட்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.
இதை பெயர் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் பொதுமக்களின் கருத்தையும் குறிப்பாக பரிமார் தெரு, அலியார் தெரு கே..டி. எம் . தெரு வாசிகளின் கருத்தையும் தெறிந்த பின் முடிவெடுப்பது சாலச் சிறந்தது. நகர்ரட்சியில் நம்முடைய கோரிக்கைக்கு மற்ற உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறதென்ற நினைப்பில் தான் தோண்டித்தனமாக நடக்க முயற்சிக்க வேண்டாம்.
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி ஆகிவிடக் கூடாது.
5. என் வரி பணத்தை வீண் விரையம் செய்யாதீர்கள்...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[15 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29506
நகராட்சியில் சிங்கிதுறை மற்றும் கொம்புதுறை என்று பெயர் மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றி விட்டார்களா? அல்லது ஆணையர் மற்றும் தலைவி அவர்களின் சதி செயலா? சகோதரர் சாளை அப்துல் ரசாக் அவர்களின் மிக தெளிவான கேள்விக்கு (கருத்துக்கு) நகரமன்ற தலைவி அவர்கள் கொஞ்சம் சிந்தித்து இனி தவறுகள் இல்லாமல் பார்த்து ஒப்பம்மிட வேண்டும்...!
அது போல் அரசு ஆவணங்களில் இல்லாத தனி நபர்கள் மூலம் தெருக்களுக்கு தெரு பலகை வைத்து பெயரிட படும் அவன் செயல் காலனி மற்றும் ஹாஜி அக்பர்ஷா 1தெரு, ஹாஜி அக்பர்ஷா 2வது தெரு, ஹாஜி அக்பர்ஷா 3வது தெரு விசியதிலும் ஆவணங்கள் ஒப்பமிடும் போது கவனம் செலுத்துமாறு நான் கேட்டு கொள்கிறேன்...!
சரி.. சரி... இந்த கூட்டம் முதலில் நடக்கமா...? அதுவே மிக பெரிய கேள்விக்குறியான எதிர்பார்ப்பா இருக்கு மக்கள் மத்தியில்...!
வெளிநடப்பு செய்யும் உறுப்பினர்கள் அவரவர் உறுப்பினர்கள் வார்டில் வேலை நடப்பது இல்லை... நான் (உறுப்பினர்) கொண்டு வந்த குறைகள் இந்த மன்றத்தின் மூலமாக நடப்பது இல்லை நான் (உறுப்பினர்) புறக்களிக்கப்படுகிறேன் ஆகையால் நான் (உறுப்பினர்) வெளிநடப்பு செய்கிறேன் என்று சொல்லி இவர்கள் (உறுப்பினர்) வெளிநடப்பு செய்தால் நகர் மக்கள் (உங்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய - வரிசெலுத்தும் மக்கள்) நாங்கள் சந்தோஷ படலாம்...! உங்களின் வெளிநடப்பு அதற்க்கு மாற்றமாக அல்லவா இருக்கின்றது...! நகரமன்ற தலைவிக்கும் உங்களுக்கும்(உறுப்பினர்) தனிப்பட்ட பிரச்னை என்றால் அதை நீங்கள் தனியாக வெளியில் சமாளியுங்கள்...! அதை விட்டு விட்டு நகர் நல தீர்மானங்கள் ஏதும் கூட்டத்தில் நிறைவேறாமல் என் வரி பணத்தை (மக்கள் வரிபணத்தை) வீண் விரையம் செய்யாதீர்கள்...!
தற்போது நகர மக்கள் மிக தெளிவோடும் விழிப்புணர்வோடும் இருக்கிறார்கள் என்பதனை நினைத்துகொள்ளுங்கள்...
6. நகராட்சி அறிவிப்பில் சிங்கிதுறை posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[18 August 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 29554
சகோதரர் அப்துல் வாஹித் அவர்களே, கருத்து பதிவிற்கு பதில் கருத்து பதியும் போது, முதல் கருத்து பதிந்தவர் என்ன கருத்து பதிந்துள்ளார் என்று நன்கு புரிந்து பதில் கருத்து பதியவும்.
நீங்கள் சொல்லியது போல், ஆசாத் தெரு (துஷ்டராயர் தெரு) தீவு தெரு (பண்டக சாலை தெரு) & மரைக்கார் பள்ளி தெரு (கடற்கரை தெரு பற்றி நம் நகராட்சி பதிவேடுகளில் இன்னும் பழைய பெயர்களில் இருந்தால் அதை இப்போது இருக்கும் புதிய பெயர்களில் மாற்ற ஆட்சேபனை இல்லாமல் இருந்தால் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசாங்க gazette -இல் மாற்ற நடவடிக்கை எடுக்க அந்தந்த தெருவாசிகள் முயற்சி எடுக்கவும்.
இதை தவிர்த்த மற்ற நகர்கள், புதியதாக layout போட்டு நகராட்சியில் பிளான் அப்ருவல் வாங்கும்போது, எந்த பெயர்களில் அனுமதி வழங்கப் பட்டுள்ளதோ அந்த பெயர்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
நான் தெரிவித்த கருத்தில், நமதூர் மக்கள் (நீங்களும் சேர்த்து தான் என்று நான் நினைக்கிறேன்) போராட்டம் நடத்தி கற்புடையார் வட்டம் மற்றும் கடையக்குடி என்பதை மாற்றி மற்ற பெயர்களில் அழைக்க கூடாது என்று தான்.
நானும் நீங்களும் மற்றும் பொதுமக்களும் எந்த பெயர்களில் வென்றுமென்றாலும் அழைக்கலாம். ஆனால் என் கருத்து, நகராட்சி சார்பில், நகரமன்ற தலைவி அவர்களால் கையொப்பமிட்ட, கூட்ட பொருளில் சிங்கிதுறை என்று இருக்கிறதே. அந்த பெயரில் தெரிந்து தான் தலைவி ஒப்புதல் கொடுத்தார்களா?
மேலும் சென்னை அண்ணா சாலை (Mount Road) பற்றி அரசாங்க மற்றும் மாநகராட்சி அறிவிப்பில் அண்ணா சாலை என்று தான் இருக்கிறதே தவிர, மற்ற மக்கள் அழைக்கும் Mount Road என்ற பெயரில் இல்லை என்பதை நன்கு தெரிந்து கொள்ளவும்.
நகரமன்ற தலைவி அவர்கள் தெரிந்து / தெரியாமல் செய்த தவறை சுட்டிக் காண்பித்தால், அதை சரி செய்வதற்கு ஆலோசனை கூறவும். அல்லது உங்களுக்கும் சிங்கிதுறை என்பதில் உடன்பாடா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross