காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் கடைசி பத்து நாட்களில் ஏதேனும் ஒரு நாளின் பின்னிரவில் கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை நடத்தப்படுவது வழமை.
நடப்பாண்டின் கியாமுல் லைல் தொழுகை இம்மாதம் 06ஆம் தேதி பின்னிரவு (ரமழான் 28ஆம் நாள் இரவு) 10.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் துவங்கியது. திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள - அப்பள்ளியின் முன்னாள் - இந்நாள் ஹாஃபிழ் மாணவர்கள் 32 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, முழு குர்ஆனையும் ஓதி தொழுகை நடத்தினர்.
பின்னர், தொழுகையை வழிநடத்திய ஹாஃபிழ்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி, பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரும், காயல்பட்டினம் குத்பா பெரிய – சிறிய பள்ளிகளின் தலைவருமான ஹாஜி ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி நிர்வாகிகளான முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் கய்யூம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துளிர் பள்ளி செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ ஏ.எச்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, நஸூஹிய்யா மத்ரஸாவின் நிறுவனர் ஹாஜி கிழுறு முஹம்மத் ஹல்லாஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், கியாமுல் லைல் சிறப்புத் தொழுகையை வழிநடத்திய ஹாஃபிழ்களுக்கு பணமுடிப்பு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது. மேடையில் வீற்றிருந்தோர் வழங்க, ஹாஃபிழ்கள் பெற்றுக்கொண்டனர்.
ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில், ஹாஜி ஏ.எல்.அப்துர்ரஹ்மான், ஹாஜி ‘பெத்தப்பா’ சுல்தான் உள்ளிட்ட பொதுமக்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன் காமில் தலைமையில், ஹாஜி ஏ.டபிள்யு.ருக்னுத்தீன் ஸாஹிப், ஏ.கே.அப்துர்ரஹ்மான், பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், பள்ளி ஆசிரியர் ஏ.எல்.பஷீருல்லாஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
A.W.ருக்னுத்தீன் ஸாஹிப்
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) ரமழான் மாதத்தில் நடத்தப்பட்ட கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |