தமிழ் நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் அங்கமாக விளங்கும் மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம்
தருவைக்குளம், தூத்துக்குடியில் வருகின்ற 27.08.2013 அன்று சிங்கி இறால் கொழுக்க வைத்தல் ஒரு நாள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் வளர்ப்பிற்கேற்ற சிங்கி இறால் வகைகள், சிங்கி இறால்களில் ஆண் பெண் அடையாளம் கண்டறிதல், சிங்கி இறாலின் இனவிருத்தி, சிங்கி இறாலின் வளர்ச்சி, கொழுக்க வைக்க்
சிங்கி இறால் தேர்வு செய்யும் முறை, கிடைக்கும் காலங்கள், இடங்கள், சிங்கி இறால் வளர்ப்பு முறைகள், அறுவடை முறைகள், சிங்கி இறால் வளர்ப்பு செலவின வருமான கணக்கீடு குறித்த
தொழில்நுட்ப வகுப்பு மற்றும் செயல்விளக்க பயிற்சிகள் அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 26.08.2013 (திங்கள் கிழமை) மாலை 5.45 மணிக்குள் தொலைபேசி மூலமாக
அல்லது கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம்,
தருவைக்குளம், தூத்துக்குடி.
தொலைபேசி எண்: 0461 - 2910336, 2340554
அலைபேசி எண் - 9442288850
தகவல்:
www.tutyonline.com |