காயல்பட்டினம் தைக்கா தெருவிலமைந்துள்ள ஸாஹிப் அப்பா தைக்காவில், அஷ்ஷெய்க் உமர் வலீ நாயகம் அவர்களின் பிரதான குருவான மஹான் புகாரீ தங்கள் அவர்களின் நினைவு நாள் கந்தூரி நிகழ்ச்சி இம்மாதம் 10ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெற்றது.
அன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் மாலை 05.00 மணிக்கு மஹான் அவர்களின் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. மஃரிப் தொழுகைக்குப் பின் இரவு 07.00 மணிக்கு, ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வரும், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் இமாமுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, மஹான் அவர்களின் வாழ்க்கை வரலாற்று சொற்பொழிவை நிகழ்த்தினார்
மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை துஆ இறைஞ்ச, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
M.U.முஹம்மத் இம்ரான் (ஹாங்காங்)
ஸாஹிப் அப்பா தைக்காவில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) நடைபெற்ற மஹான் புகாரீ தங்ஙள் நினைவு நாள் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |