இந்தியாவின் 67ஆவது சுதந்திர நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்திலுள்ள காவல்துறை மைதானத்தில் சுதந்திர நாள் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவி குமார் தேசிய கொடியேற்றினார்.
1. அன்னை மடி சுகமன்றோ! posted bykavimagan m.s.abdul kader (doha..qatar.)[15 August 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29487
எழுத்துரிமை, பேச்சுரிமை
எமக்களித்த திருநாடே!
சுதந்திரம் வாங்கித் தந்தவரை
சுட்டுக் கொல்வதற்கும்
திட்டித் தீர்ப்பதற்கும்
மட்டற்ற உரிமை தந்தாய்
மதிக்கின்றேன் உன் மகிமை.....
தன்னலமே கருதாமல்
தேசத்தின் துயர் துடைக்க
சிறை சென்ற தலைவர்களே!
இதயத்தில் ஏந்துகின்றேன்
இன்று மாத்திரம்..... நாளை முதல்
கொடிகளிலும்,சிலைகளிலும்....
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் ..
உனக்குத் தெரியுமா பாரதி....
கங்கையில் நீர்ப் பெருக்கு
காவிரியில் கண்ணீர்ப் பெருக்கு
வெற்றிலைப் பயிரிற்றவன் வயிறு
வற்றிப் போய் விட்டது....
இருந்தும் பாடுகிறான்
வந்தே மாதரம்....
விதி என்றேனும் நதிகளை இணைக்குமென்று...
தங்க நகையணிந்த
மங்கைப் பெண்ணொருத்தி
நள்ளிரவு வேளையிலே
நடு வீதி நடந்திட்டால்
அதன் பெயர்தான் சுதந்திரம்
என்றீரே காந்தி மகான்....
பட்டப் பகலினிலே
பச்சிளம் குழந்தைகளே
படும்பாடு அறிவீரோ
பார்க்காமல் போய்விட்டீர் ......
அடக்குமுறை, அநியாயம்
ஒடுக்கிவிட உயிர்நீத்த
பகத்சிங்,வாஞ்சிக்கு
பரங்கியர் வைத்த பெயர்
"பயங்கர வாதிகள்".....
இந்தநிலை மாறவில்லை
எமதருமை தேசத்தில்.......
நம்பிக்கை வைப்போம் நாம்
நல்ல காலம் பிறக்குமென்று!
வறுமைக் கோட்டின் கீழ்
வைத்து விட்டாய் எங்களை நீ!
இருந்தும் நன்றி உண்டு
கருப் பையில் சுமந்ததற்கு!
ஆயிரம் முட்களுண்டு...
எனினும் அன்னை மடி சுகமன்றோ.....
அரவணைக்கும் தாயே நீ
மறவேனோ இமைப் பொழுதும்?
புலம்பி விட்டேன் பெற்றவளே...
பொறுத்து எனை மன்னிப்பாய்!
பலாச்சுளையின் இனிப்பு இது
பாரதத்தின் சுதந்திர நாள்....
முட்களை நாம் மறந்திடுவோம்
மதுரத்தில் மகிழ்ந்திருப்போம்.....
2. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[15 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29494
முன்பு வெள்ளைக்காரனுக்கு அடிமையாய் இருந்தோம். இன்று அரசியல்வாதிகளுக்கு அடிமையாய் இருக்கிறோம். நம்மை அடிமைப்படுத்திய ஆள்தான் மாறியிருக்கிறார்களே தவிர, இன்னும் நம் அடிமைத்தனம் மாறவேயில்லை.
3. Re:...நேர்மையே உன் விலை என்ன? posted bymackie noohuthambi (kayalpatnam)[15 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29504
கலக்டர் ஆஷ் துரையை சுடுவதற்கு வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்துக்குள் புகுந்தான்.
பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க வேண்டும் எனபது சட்டம். அந்த வேளையிலும் சட்டத்தை மதித்து ஒரு பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக்கொண்டுதான் உள்ளே சென்றானாம். கலக்டரை சுட்டுவிட்டு கழிவறைக்கு செல்கிறான் தன்னையும் சுட்டு மாய்த்துக்கொள்ள. அப்போதும் அவன் பெண்கள் கழிப்பறை முன்னே வந்த போது அங்கு போவது முறையில்லை என்று ஆண்கள் கழிப்பறைக்குள் போய் தன தொண்டை குழியில் துப்பாக்கியை வைத்து தன்னை தானே மாய்த்துக் கொண்டானாம். இந்த பதட்டமான வேளையிலும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்த வாஞ்சி நாதன் எங்கே, நேர்மையான கலக்டரையே இடமாற்றம் செய்யும் வாஞ்சிநாதன் புகழ்பாடும் அரசியல் தலைவர்கள் எங்கே.
நேர்மையே உன் விலை என்ன? சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகள் ஆகிவிட்டன, இல்லை நேர்மை இந்த நாட்டை விட்டு விடை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross