இந்தியாவின் 67ஆவது சுதந்திர நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 09.30 மணியளவில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். பள்ளி மாணவர் ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் கே.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
ஹாஜி ஏ.எஸ்.நெய்னா ஸாஹிப் தேசிய கொடியேற்றினார்.
பின்னர், பள்ளியின் சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ சிறப்புரையாற்றினார்.
பள்ளி ஆசிரியர் எம்.கே.ஷரீஃப் நன்றி கூறினார். ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளி மாணவ-மாணவியர், பெற்றோர், நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் சார்பில் கடந்தாண்டு (2012) நடத்தப்பட்ட சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |