இந்தியாவின் 67ஆவது சுதந்திர நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் நகராட்சியில் சுதந்திர நாள் விழா இன்று காலை 09.15 மணியளவில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விழாவிற்குத் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழா நிகழ்ச்சிகளை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நெறிப்படுத்தினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர் தமிழ் செல்வன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், விழாவிற்குத் தலைமை தாங்கிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தேசிய கொடியேற்றி வைத்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.
13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீன், நகரின் பொதுநல ஆர்வலர்கள் விளக்கு முஹைதீன் தம்பி, இப்ராஹிம் பைசல், ராமசாமி, சம்சுதீன், சாளை முஹம்மது முஹைதீன் உட்பட நகரின் பொதுநல ஆர்வலர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடந்தாண்டு (2012) நடத்தப்பட்ட சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 5:05 pm/ 15-08-2013] |