இந்தியாவின் 67ஆவது சுதந்திர நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில், அதன் அலுவலகத்திற்கு எதிரில் இன்று காலை 09.30 மணியளவில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் விழாவிற்குத் தலைமையேற்று, தேசிய கொடியேற்றி, வாழ்த்துரை வழங்கினார்.
கே.வி.ஏ.டி. அறக்கட்டளை தலைவர் ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், நகர்மன்ற உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், நகர பிரமுகர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அறிமுகவுரையாற்றினார். மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் கடந்தாண்டு (2012) நடத்தப்பட்ட சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |