இந்திய நாட்டின் 67ஆவது சுதந்திர நாள் விழா இம்மாதம் 15ஆம் தேதி (நேற்று) கொண்டாடப்பட்டது.
இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்தில் நேற்று காலை 09.30 மணியளவில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. இலங்கை நாட்டிற்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹா இந்திய தேசிய கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர நாள் உரையாற்றினார்.
நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இவ்விழாவில், இலங்கை வாழ் காயலர்களான ஹாஜி பி.எம்.ரஃபீக் புகாரீ, காதிர் சுலைமான், புகாரீ அய்யூப், தொண்டி அஷ்ஃபக் ஆகியோரும் கலந்துகொண்டனர். விழா நிறைவுக்குப் பின், அவர்கள் இந்திய தூதரை சந்தித்து, சுதந்திர நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
தகவல் & படங்கள்:
கொழும்புவிலிருந்து...
ஹாஜி B.M.ரஃபீக் |