காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில், வெளியூர், வெளிநாடு வாழ் காயலர்கள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு வருமாறு:-
1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி காயல்பட்டனம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய இயலாநிலை குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இச்சிறப்பு பள்ளிக்கு அனுசரணையும், ஆலோசனையும் வழங்கிடும் கூடத்திற்கு பெங்களுரு காயல் நல மன்றத்தின் செயலர் எம்.எம்.சுலைமான் ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டம் துளிர் சிற்றரங்கத்தில் 10.08.2013 இரவு 07.30 மணியளவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு லண்டனில் பணியாற்றும் மருத்துவர் அபு தலைமை தாங்கினார். ஹாங்காங் கதே பசிபிக் விமான நிறுவனத்தில் பணியாற்றும் எச்..எம்.எஸ்.ஹபீப் ஷக்கீல் மற்றும் ஹாங்காங்கில் பணியாற்றும் பாளையம் முஹ்ஸின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டனம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயலர் எஸ்.எம்.ஜெ.முஹம்மத் பாக்கர் கிராஅத் ஓதினார். துளிர் செயலர். எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றார். துளிர் நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத் - தொடுதிரை மூலம் துளிரின் எதிர்காலத் திட்டம், .பட்ஜெட் ஆகியவற்றை விளக்கினார்.
இயலாநிலை குழந்தைகளுக்கு துளிரின் அவசியம் எனவும், அவர்களுக்கான மருத்துவம், மறுவாழ்வு முறைகள் குறித்து டாக்டர் அபு பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் எதிர்காலத்தில் துளிருக்கு உதவிட ஒப்புதல் அளித்தனர். துளிரின் எதிர்கால வளர்ச்சிக்கு தங்களின் ஆலோசனைகளை தனித்தனியாக தெரிவித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் காயல்பட்டனம் கிளை சார்பில் பெருநாள் தொழுகையின் போது வசூலிக்கபட்ட நன்கொடை நிதியிலிருந்து ரூபாய்.16,500/ தொகையை, அதன் உறுப்பினர் முஹம்மத் அப்துல் காதிர் (சாளப்பா)வும்,
பெங்களுரு காயல் நல மன்றம் வசூலித்த ருபாய்.26,000/ய் அதன் துணைத்தலைவர். கே.கே.எஸ்.முஹம்மத் சாலிஹும்,
மலபார் காயல் நல மன்றம் வசூலித்த ருபாய்.16,500/ய் அதன் தலைவர். எஸ்.எம். மஸுதும்,
சென்னையில் வசூலித்த ருபாய்.45,000/ய் தி..நகர் பாத்திமா ஜுவல்லர்ஸ் பணியாளர் விளக்கு முஹம்மது அலியும்,
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் சார்பில் ருபாய்.10,000/ய் டாக்டர் அபுவும்,
துளிரின் செயலர். எம்.எல்.ஷேக்னா லெப்பையிடம் வழங்கினர்.
இந்த கூட்டத்தில் கத்தர் தோசிபா நிறுவன உயர் அதிகாரி அபு, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் V.S.T. ஷேக்னா, ஜப்பானில் பணியாற்றும் செய்து அஹமத், ஹாங்காங் கஸ்வாவின் எம்.செய்யித் அஹ்மத், காவாலங்காவின் உறுப்பினர் முஹம்மத் அலி, ஹாங்காங் வர்த்தகர்கள் காமில் காதர் சாஹிப் மற்றும் புஹாரி, திருவனந்தபுரம் காயல் நல மன்ற பிரதிநிதி சுல்தான், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் S.ஷம்சுத்தீன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். மலபார் காயல் நல மன்ற உறுப்பினர் மீரா லெப்பை நன்றி கூறினார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 10:00 am / 18.08.2013] |