ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் இம்மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், கடைப்பள்ளிக்கு எதிரிலுள்ள அதன் அலுவலக வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், “வழிபாடுகளில் நிகழும் குறைபாடுகளும், அவற்றைக் களையும் வழிமுறைகளும்” எனும் தலைப்பில், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை அமைப்பின் துணைத்தலைவரும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநில நிர்வாகியுமான - காயல்பட்டினத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் கலந்துகொள்ளுமாறும், அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி ஏ.லுக்மான் கேட்டுக்கொண்டுள்ளார். |