காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலையோரங்களில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் வினியோகக் குழாய்கள் அவ்வப்போது உடைவதும், பிறகு அதனை சரிசெய்வதும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும் வாடிக்கை.
முன்பு போல இரும்புக் குழாய்கள் பதிக்கப்படாமல், ப்ளாஸ்டிக் குழாய்கள் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ளதால், வினியோகத்திற்காக குடிநீர் திறந்து விடும்போது, அதன் திடீர் அழுத்தத்தால் இதுபோன்று வெடிப்புகளும், உடைப்புகளும் ஏற்படுவதாக அதிகார வட்டத்தில் கூறப்படுகிறது.
காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலுள்ள சாலையோரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு பல காலமாக இருந்து வருகிறது. அதிலிருந்து நாள்தோறும் குடிநீர் வெளியேறி, தரைப்பரப்பில் தேங்கி நிற்கும். அவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீரில், காகம், நாய் உள்ளிட்ட உயிரினங்கள் குளிப்பதும், ஆடு - மாடு உள்ளிட்ட விலங்குகள் நீரருந்திச் செல்வதும் அன்றாடம் காணக்கிடைக்கும் காட்சிகள்.
இன்று காலையில் காணக்கிடைத்த காட்சிகள்:-
படங்கள்:
முத்துவாப்பா (தம்மாம்) |