தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணி முதல் 10.00 மணி வரை, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
அமைப்பின் மாவட்ட செயலாளர் அய்யூப் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், “இறுதி மூச்சு வரை ஏகத்துவம்” எனும் தலைப்பில், காயல்பட்டினம் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் ஏ.அப்துல் மஜீத் உமரீ, “இஸ்லாமும், இன்றைய இளைஞர்களும்” எனும் தலைப்பில் - ததஜ மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபீ ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
பெண்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. |