Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:48:11 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11613
#KOTW11613
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013
சுதந்திர நாள் 2013: சென்னையில் சுதந்திர தின நிகழ்ச்சி புகைப்படங்கள் மற்றும் முதல்வரின் உரை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2663 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

67வது சுதந்திர தினம் சென்னையில் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துக்கொண்டனர்.



சென்னையில் சுதந்திர தினம் அன்று தமிழக முதல்வர் - போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி ...





சுதந்திர தின நிகழ்ச்சியில் காவல்துறை அணிவகுப்பை முதல்வர் ஏற்றுக்கொண்ட காட்சி ...



புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் கொடியேற்றிய காட்சி ...



சுதந்திர தின நிகழ்ச்சியில் தேசிய கோடியை ஏற்றி முதல்வர் உரை நிகழ்த்திய காட்சி ...



சுதந்திர தின நிகழ்ச்சியில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய காட்சி ...



சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தேநீர் உபசரிப்பு நடத்திய காட்சி ...



தமிழக முதல்வரின் சுதந்திர தின உரை

மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களே,
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே,
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதியரசர் அவர்களே,
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்களே,
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே,
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களே,
அரசு உயர் அதிகாரிகளே, அலுவலர்களே,
காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களே,
காவல் துறை உயர் அதிகாரிகளே, காவலர்களே,
வணக்கத்திற்குரிய பெரியோர்களே,
என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே,
இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனது அருமை உடன்பிறப்புகளே,

உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தையும், சுதந்திர தின நல்வாழ்த்துகளையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். 67-வது சுதந்திர தின நன்னாளில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்ததில் பெருமிதம் அடைகிறேன். இந்த வாய்ப்பை நல்கிய தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுதந்திரம் என்ற வார்த்தையே நமது மனங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான சுதந்திரத்தைப் பெற ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழகத்திலிருந்து முதலில் குரல் கொடுத்தவர்கள் பாளையக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோரின் புரட்சி மகத்தானது. இதுவே சுதந்திரப் போராட்டத்திற்கான முதல் வித்தாக அமைந்தது.

இந்திய அளவில், சர்தார் வல்லபாய் பட்டேல், பாலகங்காதர திலகர், அண்ணல் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என பல தலைவர்கள் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்ரமண்ய பாரதியார், திருப்பூர் குமரன், தீரர் சத்தியமூர்த்தி, சுப்ரமண்ய சிவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அயல்நாட்டு வீராங்கனை அன்னி பெசன்ட் அம்மையார், மாவீரன் வாஞ்சிநாதன் என எண்ணற்ற தலைவர்கள் ரத்தம் சிந்தியும், உயிரைக் கொடுத்தும் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரத்தை நமக்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த விடுதலைத் திருநாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தியாகிகளுக்கும் என்னுடைய வீர வணக்கத்தினை செலுத்துகிறேன்.

சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், வேலைவாய்ப்பு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சமூக, பொருளாதார காரணிகளால் ஒடுக்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதருக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரத்திற்கான இலக்கணம். இப்படிப்பட்ட தனி மனித ஆற்றலை வெளிக் கொணருவதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே தான் அனைவரும் கல்வி பயிலும் வண்ணம் கட்டணமில்லாக் கல்வி; கட்டணமில்லா பேருந்து வசதி, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், ஒரு இணை காலணி, நான்கு இணை சீருடைகள், நில வரைப்படப் புத்தகம் போன்றவை வழங்கப்படுகின்றன. மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர் தங்களின் அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள மடிக்கணினி வழங்கப்படுகிறது. இடை நிற்றலை அறவே நீக்கும் வகையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ – மாணவியருக்கு மொத்தம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1,075 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அரசின் இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாக கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய பள்ளிகளை ஏற்படுத்துவதுடன், பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு கடந்த 2 ஆண்டுகளில், 51,757 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரிகள் அதிக அளவு இல்லாத பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர், உயர்கல்வி பெறும் வகையில் 11 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஒரு பொறியியல் கல்லூரி சென்ற ஆண்டு துவங்கப்பட்டுள்ளன. அதே போன்று, இந்த ஆண்டு 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; 2 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்; 3 அரசு பொறியியல் கல்லூரிகள்; 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள்; தேசிய சட்டப் பள்ளி மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவை துவங்கப்படும். மேலும், மீனளப் பல்கலைக்கழகம், 2 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 6 கால்நடை ஆராய்ச்சி மையங்கள் மற்றும் 2 மீன்வள தொழில்நுட்ப நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி அறிவுடன் உடல் வலிமையும் பெற்றிருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் பல நடவடிக்கைகளை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள் கொண்ட, மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சை வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே மிக அதிக அளவாக 12,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் 4,000 ரூபாய் கர்ப்ப காலத்தின் போதும்; 4,000 ரூபாய் அரசு மருத்துவமனைகளில் குழந்தையை பெற்றெடுக்கும் போதும்; குழந்தைகளுக்கான அனைத்து தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்டவுடன் 4,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தாய் இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், 31.7.2013 வரை சுமார் 15 லட்சத்து 31 ஆயிரம் தாய்மார்களுக்கு 1,339 கோடியே 36 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, நடமாடும் மருத்துவமனை திட்டம்; மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கென மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்; 24 மணி நேரமும் செயல்படும் `சீமாங்க்’ மையங்களின் வசதிகளை மேம்படுத்தும் திட்டம்; அவசர கால ஊர்தி சேவை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்கள் சிறந்த மருத்துவ சேவை பெற்றிடும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆண்டொன்றுக்கு 750 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏறக்குறைய 4 லட்சத்து 16 ஆயிரம் பயனாளிகள் சுமார் 916 கோடி ரூபாய் அளவுக்கு இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை உருவாக்கும் வகையில் உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. நுண்ணீர் பாசனத்திற்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்; இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம்; பயிர் வாரியான நவீன தொழில்நுட்ப உத்திகளை கடைபிடித்தல்; வேளாண்மையை இயந்திரமயம் ஆக்கல்; பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை குறைந்த வாடகையில் வழங்குதல்; நிலத்தடி நீர் செறிவூட்டு கட்டுமானங்கள் அமைத்தல் என பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு எடுத்துள்ளது.

17 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அந்த தொழில் நிறுவனங்கள் இங்கே தொழில் துவங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். இது மட்டுமல்லாமல், தென் தமிழ்நாட்டில், தொழில் வளர்ச்சியை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தொழிற் பூங்காக்களை அமைத்திட உத்தரவிட்டுள்ளதோடு, அங்கு தொழிற்சாலைகளை அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் அப்பகுதிகளில் தொழில் வளர்ச்சி பெருகுவதோடு லட்சக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும். எனது தலைமையிலான அரசின் வெளிப்படையான அணுகுமுறை காரணமாக தொழில் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எய்துதல்”, என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை சமர்ப்பித்த The Associated Chambers of Commerce and Industry of India,, என்ற அமைப்பு; அரசு, தனியார் மற்றும், பொதுத் துறை ஆகியவை 2012-2013 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 815 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளது. திருமயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரத மிகுமின் நிறுவனத்தின் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பாரதப் பிரதமர் அவர்கள், தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும்; மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு விளங்குகிறது என்றும் தெரிவித்து இருக்கிறார் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் அதே சமயத்தில், ஏழைத் தாய்மார்களின் நலன் காக்கும் வகையில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. வீட்டு வசதியை பெருக்கும் வகையில் பசுமை வீடுகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நெசவாளர்களுக்கென 10,000 வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலும்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் ஓய்வூதியத்தை 1,000 ரூபாயாக எனது அரசு வழங்கி வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வந்தாலும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை; பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயக் கொள்கை; ஊட்டச்சத்து அடிப்படையிலான உர மானியக் கொள்கை; அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை; மானிய விலையிலான சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் போன்றவற்றின் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாலும்; மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை அடிக்கடி உயர்த்துவதாலும்; அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. இந்த விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய, சாமானிய மக்களை காப்பாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு எடுத்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மாதம் ஒன்றுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி; மானிய விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சர்க்கரை; அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக அரிசி கிலோ ஒன்றிற்கு, 20 ரூபாய் என்ற விலையில் வெளிச் சந்தையில் விற்பனை; காய்கறி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு அமைப்புகள் மூலமும், தோட்டக்கலைத் துறை மூலமும், விவசாயிகளையும், நுகர்வோரையும் நேரடியாக இணைக்கக் கூடிய பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள்; சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி முழுவதுமாக ரத்து; அனைத்து மாநகராட்சிகளிலும் குறைந்த விலையில் சிறந்த உணவு வகைகளை வழங்கும் அம்மா உணவகங்கள் என பல்வேறு விலைவாசி குறைப்பு நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன்.

தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்திற்கே பங்கம் விளைவிக்கும் வகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முனைந்துள்ளது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் தற்போது குடும்ப அட்டைகள் மூலம் வழங்கப்படும் அரிசியில் 1 லட்சம் டன் அரிசி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும். எனவே, இதில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள நான் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது; என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்கப்படாமல் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களே வாங்க வழிவகை செய்தது; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் சார்பில் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன் எடுத்து வைத்தது என தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டும் உன்னதமான சாதனைகளை இந்த அரசு செய்திருக்கிறது. அதே வழியில் கச்சத் தீவில் நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சுதந்திரத்தை பெற்றுத் தந்த தலைவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு மணி மண்டபங்களும், திருவுருவச் சிலைகளும் எனது ஆட்சிக் காலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இந்த அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களை மேலும் கவுரவப்படுத்தும் வகையில் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7,000 ரூபாய் ஓய்வூதியம் 1.8.2013 முதல் 9,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்; சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 3,500 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரக் காற்றை சுதந்திரமாகவும், பெருமையுடனும் அனுபவித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் அறுபத்து ஏழாம் ஆண்டு சுதந்திர தின விழா நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகமே எனது குடும்பம்; தமிழ்நாட்டு மக்களே என் பிள்ளைகள்; தமிழக மக்களின் நலனே என் நலன் என்று கூறி;

வாழ்க பாரத மணித் திருநாடு! வளர்க செந்தமிழ் நாடு!
அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!

என்று கூறி விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சுதந்திரத்திற்காக பாடுபட்ட மறைக்கப்பட்டவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம்!
posted by M.S அப்துல் ஹமீது (Dubai) [16 August 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29528

திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை காந்திஜியிடம் வழங்கிய பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானியை நினைவுகூர்வோம்.

1905ல் சுதேசிக் கப்பல் கம்பெனிக்காக பங்குதாரர்களைச் சேர்க்க வந்த வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரை செட்டியா ஆகியோரைத் தனது இல்லத்தில் பல நாட்கள் தங்க வைத்து உபசரித்த, சுதேசிக் கப்பல் கம்பெனி பங்குகளைத் தான் வாங்கியதோடு உத்தமபாளையம், கம்பம், சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த தனவந்தர்கள் பலரையும் பங்குதாரர்களாக்கிய, 1907ல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச் செட்டியார் ஆகியோரைத் தன் சொந்ச் செலவில் அழைத்துச் சென்ற உ.ம.சே முஹைதீன் பிள்ளை சாஹிபை நினைவு கூர்வோம்.

1908ல் வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் மிகப் பெரிய எழுச்சிப் போராட்டம் நடைபெற்றபொழுது, அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியான முதல் நபர் முஹம்மது யாஸீன் என்ற இளைஞரை நினைவுகூர்வோம்.

இந்திய சுதேசி வர்க்ககத்தின் இலட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்' என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரம் பிள்ளை 16.10.1906ல் நிறுவி, அதற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டி, ரூ. இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை தனது கம்பெனி சார்பாக வாங்கிய ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட்டை நினைவு கூர்வோம்.

“காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மௌலானா முஹம்மது அலீயின் சட்டைப் பைக்குள் இருக்கிறார்!” என்று ஈ.வெ.ரா. பெரியார் குறிப்பிட்ட, அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப் பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்திய மௌலானா முஹம்மது அலீயை நினைவுகூர்வோம்.

காந்தியை தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த, குஜராத்தில் போர்பந்தரில் பிறந்து பல நாடுகளுக்கும் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய, 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்குக் கப்பல்களையும், 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை நிறுவிய அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இரு ஐவேரி சகோதரர்களை நினைவுகூர்வோம்.

இன்னும் யாராலும் பேசப்படாமலும், எழுதப்படாமலும் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு கிடக்கின்ற எண்ணிலடங்கா சுதந்திரப் போராளிகளை இந்நாளில் நினைவுகூர்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved