இந்தியாவின் 67ஆவது சுதந்திர நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் சுதந்திர நாள் விழா இன்று காலை 09.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன் தலைமை தாங்கினார். மவ்லவீ காழி அலாவுத்தீன் ஆலிம் தேசிய கொடியேற்றி, சுதந்திர நாள் உரையாற்றினார்.
பள்ளியின் பெண்கள் பிரிவில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், பள்ளி நிர்வாகி ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் தேசிய கொடியேற்றினார்.
பின்னர், பள்ளியின் சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், பள்ளியின் நிர்வாகிகள், மாணவ-மாணவியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஏ.எல்.அப்துர்ரஹ்மான், ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ, ஏ.டபிள்யு.ருக்னுத்தீன் ஸாஹிப், ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன், பள்ளி துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் கடந்தாண்டு (2012) நடத்தப்பட்ட சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |