இந்தியாவின் 67ஆவது சுதந்திர நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் மகுதூம் தெருவில் இயங்கி வரும் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி சார்பில், பள்ளி வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றியதோடு, குழந்தை வளர்ப்பு, ஒழுக்கம், சுத்தம் உள்ளிட்டவை குறித்து - பள்ளியில் பயிலும் மழலையருக்கும், அவர்களது பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினார்.
பள்ளியின் இயக்குநரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் மழலையருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தினார்.
பள்ளி வளாகத்தில், குழந்தைகளுக்கான பல வண்ணப் படங்களையும், செய்முறைப் பயிற்சிகளையும் உள்ளடக்கிய நூல்களைக் கொண்ட குழந்தைகள் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினரான காயல்பட்டினம் நகரட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நூலகத்தைத் துவக்கி வைத்தார்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி சார்பில் கடந்தாண்டு (2012) நடத்தப்பட்ட சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |