வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விபரம் வருமாறு:-
திருச்செந்தூர் அனிதா குமரன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் சார்பில், வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள், திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கால்பந்து அரையிறுதிப் போட்டியில், 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில், திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகடமி பள்ளியை எதிர்த்தும்,
17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில், திருச்செந்தூர் ஸ்டார் மாடல் பள்ளியை எதிர்த்தும்,
19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில், வீரபாண்டியன்பட்டினம் செயின்ட் தாமஸ் மேனிலைப்பள்ளியை எதிர்த்தும் விளையாடிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
நேற்று (ஆகஸ்ட் 14ஆம் தேதி வியாழக்கிழமை) இறுதிப் போட்டி நடைபெற்றது. 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியை எதிர்த்தாடி, 6-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி வெற்றி பெற்றது.
17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில், அதே பள்ளியை எதிர்த்தாடி, சமனுப்பில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில், அதே பள்ளியை எதிர்த்தாடி, 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அதே மைதானத்தில் நடைபெற்ற - 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில், திருச்செந்தூர் செந்திலாண்டவர் மேனிலைப்பள்ளியை எதிர்த்தாடி, 50-48 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றிகளின் மூலம், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி - மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
வெற்றிபெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணியினரை, அப்பள்ளியின் நிர்வாகிகள், தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தகவல்:
L.ஜமால்
படங்கள்:
S.B.B.புகாரீ
ஆசிரியர்கள்
எல்.கே.மேனிலைப்பள்ளி |