காயல்பட்டினம் நகர பள்ளிகளின் இமாம் – பிலால்களுக்கு, இவ்வாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு வினியோகிக்கப்பட்ட பெருநாள் ஊக்கத்தொகை குறித்து, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பார்ந்த காயலர்களுக்கு எங்கள் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
அல்லாஹ்வின் பேரருளால், கடந்த ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் – ரமழான் மாதத்தை முன்னிட்டு – அனைத்துலக காயல் நல மன்றங்களின் ஒத்துழைப்புடன் – நகர பள்ளிகளின் இமாம் – பிலால்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை வழங்குவதற்கான முயற்சியை எமது தாய்லாந்து காயல் நல மன்றம் முன்னெடுத்தது.
நடப்பாண்டில் இவ்வகைக்காக, கீழ்க்காணும் விபரப்படி மன்றங்களும், தனி ஆர்வலர்களும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்:-
மொத்த பள்ளிவாசல்கள் எண்ணிக்கை: 34
பயன்பெற்ற இமாம் மற்றும் பிலால்கள் 65
இமாம் / பிலால் – ஒருவருக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை ரூ.4,500
குறிப்பு: நமதூர் நிர்வாகங்களால் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பள்ளிகளின் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கும் ஏற்றத் தாழ்வின்றி ரூ.4,500 சமமாகப் பிரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டது. இதில் காட்டு மகுதூம் பள்ளி, ரெயில்வே ஸ்டேஷன் பள்ளி, திருச்செந்தூர் பள்ளி ஆகிய பள்ளிகளும் அடங்கும்.
ஒரேயொரு பள்ளியில் மட்டும் ரமழானை முன்னிட்டு தற்காலிக துணை இமாமாக பணிபுரியும் ஒருவருக்கு ரூ.3,000 கொடுக்கப்பட்டது.
இமாம் – பிலால்களுக்கான பெருநாள் ஊக்கத்தொகை வினியோகம் குறித்த கலந்தாலோசனை, வினியோகப் பணிகள் உள்ளிட்ட அனைத்திலும், கீழ்க்கண்ட மன்றங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்-
(1) சகோதரர் S.M.B.இஸ்மாஈல் (காவாலங்கா)
(2) சகோதரர் வாவு M.M.உவைஸ் (தக்வா)
(3) சகோதரர் M.S.செய்யித் முஹம்மத் (தக்வா)
(4) சகோதரர் M.M.மொகுதூம் முஹம்மத் (சிங்கப்பூர்)
(5) சகோதரர் டாக்டர் V.S.செய்யித் அஹ்மத் (அபூதபீ)
(6) சகோதரர் அப்துல் பாரிஃ (ஹைதராபாத்)
இவர்களுடன், சகோதரர் S.K.ஸாலிஹ் (தாருத்திப்யான் நெட்வர்க்)
நடப்பாண்டில், இத்திட்டத்திற்கான முயற்சிகள் துவக்கப்பட்டதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டதை நாங்கள் உணர்கிறோம். எனினும், ஆவலுடன் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து காயல் நல மன்றங்கள் மற்றும் தனி ஆர்வலர்களுக்கும் எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். (இதுகுறித்து, அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் முறைப்படி தகவலறிக்கை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.)
இன்ஷாஅல்லாஹ், அடுத்தாண்டு முதல் ரஜப் மாதத்திலேயே இத்திட்டத்திற்கான முன்முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதை அன்புடன் அறியத் தருகிறோம்.
மேலும் பல காயல் நல மன்றங்கள் இந்தத் திட்டத்தில் இணையும் பட்சம் இன்னும் சிறப்பாகவும் தொய்வின்றியும் செய்ய முடியும். அல்லாஹுத் தஆலா நம்முடைய முயற்சியில் வெற்றியைத் தர போதுமானவன்.
ஜஸாக்குமுல்லாஹு கைரா...
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில் அதன் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |