காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில், ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு கோப்பைக்கான - பள்ளிகளுக்கிடையிலான கால்பந்துப் போட்டிகள் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் போட்டிகள், இம்மாதம் 15ஆம் தேதி துவங்கி, 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டி நிரல் உள்ளிட்ட விபரங்கள் வருமாறு:-
துவக்கப்போட்டி, இம்மாதம் 15ஆம் தேதி மாலையில் நடைபெற்றது. தூத்துக்குடி புனித லசால் மேனிலைப்பள்ளியை எதிர்த்து, மூக்குப்பீறி புனித மாற்கு மேனிலைப்பள்ளி அணி ஆடிய இப்போட்டி சமநிலையில் முடிவுற்றது. பின்னர் சமனுடைப்பு முறையில், 3-2 என்ற கோல் கணக்கில் புனித லசால் பள்ளி வெற்றி பெற்று, காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
இம்மாதம் 16ஆம் தேதி காலையில் நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில், தூத்துக்குடி புனித லசால் பள்ளி அணியும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி ‘ஏ’ அணியும் மோதின. இதில், எல்.கே.மேனிலைப்பள்ளி ‘ஏ’ அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
அன்று மாலையில் நடைபெற்ற போட்டியில், சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்ட் மேனிலைப்பள்ளியை எதிர்த்து, புன்னைக்காயல் புனித ஜோஸப் மேனிலைப்பள்ளி விளையாடியது. இப்போட்டியில், எஸ்.எச்.என்.எட்வர்ட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி (இன்று) காலையில் நடைபெறும் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி ‘பி’ அணியும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி அணியும் மோதுகின்றன.
அதுபோல, இன்று மாலையில் நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில், ஏற்கனவே நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற சாத்தூர் எஸ்.எச்.என்.மேனிலைப்பள்ளி அணியும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி ‘ஏ’ அணியும் களம் காண்கின்றன.
அனைத்துப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், துணைத்தலைவர்களான ஹாஜி எஸ்.அக்பர்ஷா, ஹாஜி எஸ்.எம்.உஸைர், தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், உடற்கல்வி ஆசிரியர்களான எஸ்.வேலாயுதம், எல்.ஜமால் முஹம்மத் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். |