இந்தியாவின் 67ஆவது சுதந்திர நாள் விழா நேற்று (ஆகஸ்ட் 15ஆம் தேதி) நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழா குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் நேற்று காலை 10.15 மணிக்கு சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் விழாவிற்குத் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றினார்.
நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூறினார்.
இவ்விழாவில், கட்சியின் மாவட்ட - நகர நிர்வாகிகளான ஹாஜி எஸ்.டி.கமால், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி எம்.எம்.மொகுதூம் கண்டு ஸாஹிப், ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, அரபி ஷாஹுல் ஹமீத், ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ், ஹாஜி நெய்னா ஸாஹிப், ஹாஜி எஸ்.இ.அஹ்மத் தம்பி, செய்யித் இப்றாஹீம், மாணவரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.எல்.ஷேக்னா லெப்பை, எம்.டி.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், சுல்தான் ஜமாலுத்தீன், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஆர்.பி.ஷம்சுத்தீன், காயிதேமில்லத் பேரவை நகர செயலாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
துஆவுடன் விழா நிறைவுற்றது. விழாவின் நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கடந்தாண்டு (2012) நடைபெற்ற சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |