ஹாங்காங் நாட்டில் இம்மாதம் 09ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
ஹாங்காங் கவ்லூனிலுள்ள கவ்லூன் பெரிய பள்ளிவாசலில், வழமை போல 3 விடுத்தங்களாக நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
காலை 07.30 மணிக்கு முதல் தொழுகை நடைபெற்றது. பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார்.
காலை 09.00 மணிக்கு இரண்டாம் கட்ட தொழுகை நடைபெற்றது. பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அர்ஷத் வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார்.
காலை 10.00 மணிக்கு மூன்றாம் கட்ட தொழுகை நடைபெற்றது. கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார்.
அனைத்து தொழுகைகளிலும், காயலர்கள் உள்ளிட்ட இந்திய முஸ்லிம்கள், பாகிஸ்தான் உள்ளிட்ட பன்னாட்டு முஸ்லிம்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், அவர்கள் ஒன்றுகூடி, கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
ஹாஃபிழ் B.S.அஹ்மத் ஸாலிஹ்
P.M.I.அப்துல் காதிர்
S.M.K.முஹம்மத் இஸ்மாஈல்
மற்றும்
M.S.அப்துல் அஜீஸ் (China)
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இம்மாதம் 08ஆம் தேதி வியாழக்கிழமை இரவில், கவ்லூன் பள்ளியில், மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ தலைமையில் திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. இதில், காயலர்கள் கலந்துகொண்டனர்.
ஹாங்காங் கவ்லூன் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் காயலர் ஒன்றுகூடல் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண கீழ்க்காணும் இணைப்புகளில் சொடுக்குக!
செய்தி 1
செய்தி 2
செய்தி 3
செய்தி 4
செய்தி 5 |