ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அங்குள்ள துபை நகரில் காயலர்களது பெருநாள் ஒன்றுகூடல் தொடர்பாக பெறப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் இந்த புனித ரமழான் மாதம் 29 நாட்களோடு நேற்று 07/08/13 அன்று முடிவிற்கு வந்தது. இன்று ஷவ்வால் மாதம் முதலாம் பிறை என்ற முடிவு நேற்று இஷா தொழுகைக்குப் பிறகு அமீரகத்தின் அதிகாரப்பூர்வான அறிவிப்பு மிகவும் தீவிரமான ஆலோசனைகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிர்க்குப் பிறகு இஷா தொழுகை முடிந்த பிறகு தக்பீர் சொல்லப்பட்டு பெருநாள் முடிவு அறிவிக்கப்பட்டது. இதனால் அமீரகமே களை கட்டியது.
அறிவிக்கப்பட்ட படி இன்று அதிகாலை 06:10 மணிக்கு அமீரத்தின் பல பகுதிகளிலும் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. துபை அல் பராஹாவில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் வழமை போல் காயலர்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் பல்லாயிரக்கணக்கில் கூடினர்.
தற்போது துபாயில் வானிலை உச்சகட்ட கோடைகாலம் என்பதால் தொழுகையின்போது வானிலை எப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்பட்டது. ஆனால் வழமைக்கு மாற்றமாக, இன்று மிகவும் ரம்மியமான சூழல் இருந்தது. மிதமான காலை; சுகமான காற்று மக்கள் மனங்களைப் பெரிதும் கவர்ந்தது.
தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் பலர் தாயகம் சென்றுள்ளனர். இதனால் காயலர்கள் கூட்டம் வழமையை விட குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும் வந்திருந்தோர் ஒருவருக்கொருவர் முகமன் கூறி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு, வெகு நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் களைந்து சென்றனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருபை உள்ள வல்ல அல்லாஹ், நம் அனைவர்களின் பாவங்களை மன்னித்து, நம்முடைய நோன்பை அங்கீகரித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்திற்கு அல்-ரய்யான் என்ற வாயில் வழியாக நுழையும் பாக்கியத்தை அருள்வானாக.
கடந்த ரமலான் மாதம் முழுவதும் பல நன்மையான காரியங்களும், அதிக வணக்கங்களும், குரானின் தொடர்பும், தான தர்மங்கள் செய்தும், வீணானா விசயங்களை தவிர்த்தும் வந்தோம். இதை வல்ல ரஹ்மான் ஏற்றுக்கொண்டு, இந்த நல்ல செயல்களை மற்ற காலங்களிலும் ஆயுள் வரை தொடர அருள் புரிவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross