அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் - தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 01 முதல் 16 வார்டுகள் வரை முழுமையாகவும், 18ஆவது வார்டில் பெரும்பாலோரிடமும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியையொட்டியுள்ள மஜ்லிஸுல் கரம் சங்க வளாகத்தில் 17ஆவது வார்டு பொதுமக்களிடம் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 17ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை நகர கிளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வழிகாட்டுப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
இம்மாதம் 06ஆம் தேதி துவங்கிய இம்முகாம் 10ஆம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுமக்களில், பல்வேறு காரணங்களால் விபரங்கள் சமர்ப்பிக்க முடியாமல் போன பொதுமக்களுக்காக இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் சிறப்பு முகாம், காயல்பட்டினம் கூலக்கடை பஜாரிலுள்ள எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இன்று அங்கு முகாம் நடைபெற்று வருகிறது.
இம்முகாம் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |