காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளி நிர்வாகத்தின் சார்பில், கவுதிய்யா சங்க வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட் 05) இரவில் ஸஹர் உணவு - களறி சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து முன்னதாகவே ஜமாஅத் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், ரூபாய் 550 செலுத்தி, 150 குடும்பத்தினர் ஸஹர் சாப்பாட்டிற்கு முன்பதிவு செய்திருந்தனர். நேற்றிரவு 11.00 மணி முதல் அவர்களுக்கு ஸஹர் சாப்பாடு வினியோகம் செய்யப்பட்டது.
ஒரு தாளத்தில் (அகன்ற தட்டு) 3 சிட்டி (கிண்ணம்) கிடா இறைச்சி, கத்திரிக்காய் பருப்பு, புளியானம் (ரசம்), சோறு ஆகியன உள்ளடக்கம்.
ஸஹர் சாப்பாட்டு ஏற்பாடுகளை, அரூஸிய்யா பள்ளி மற்றும் கவுதிய்யா சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கத்தினர் செய்திருந்தனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |