காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் செயற்குழுக் கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
KCGC செயற்குழு கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நிகழ்வுகள்
வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது KCGC அமைப்பின் செயற்குழுக் கூட்டம் 21.07.2013 ஞாயிறன்று, அமைப்பின் தலைவர் சகோ. ஆடிட்டர் ரிஃபாய் அவர்கள் தலைமையில் இஃப்தார் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
செயற்குழுக் கூட்டம்:
சரியாக மாலை 04.30 மணிக்கு அஸ்ர் தொழுகை ஜமாஅத்துடன் முடிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்தில் கீழ்க்காணும் பொருள்கள் பேசப்பட வேண்டுமென ஏற்கனவே அறிவித்தபடி ஒவ்வொன்றாக ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
1) KCGC - இணயதளம் காட்சிப்படுத்தல்:
KCGC-ன் இணயதளமான KCGC.IN - ஆன்லைனில் நேரடியாக பார்த்துக் கொள்ளுமாறும் அதில் இன்னும் சில தகவல்கள் சேர்க்கப்படவேண்டி உள்ளதென்றும் விரைவில் அப்பணிகள் செய்து முடிக்கப்படும் என்றும் அதற்கு பொருப்பளிக்கப்பட்ட சகோ. சொளுக்கு முஹம்மத் நூஹு தெரிவித்தார்.
2) காயல் ஷிஃபாவின் பணிகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தல்:
காயல் ஷிஃபாவின் பணிகள் ஜூலை மாதம் முதல் ஊரில் துவங்கப்பட்டுவிட்டதையும், உள்ளூரில் அதன் நிர்வாக அதிகாரியாக சகோ. சிராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதையும், கடைப்பள்ளிக்கு எதிராகவுள்ள கட்டடத்தில் அதன் அலுவலகம் இயங்குவதாகவும், ஷிஃபாவிற்கான கணக்குகளை தற்காலிகமாக கவனித்து பணத்தை பாதுகாக்கும் பொறுப்பு சகோ. கே.எம்.டி.சுலைமான் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் KCGCயின் ஷிஃபாவிற்கான பிரதிநிதி எம்.எம்.இப்றாஹீம் தெரிவித்தார்.
ஷிஃபாவின் அலுவலக செலவுகளுக்காக KCGC-யிலிருந்து வாக்களிக்கப்பட்ட ரூ.15000/- தொகையை ஆண்டுத்தொகையாக வழங்க கூட்டம் ஒப்புதல் அளித்தது.
3) KCGC-க்கான நிதி திரட்டுதல்:
KCGC-ன் அலுவலக செலவுகளுக்கான நிதியை உறுப்பினர்களிடமும், நல விரும்பிகளிடமும் வசூலிக்க கீழ்க்காணும் செயற்குழு உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
1) சகோ. ஆடிட்டர் ரிஃபாய் (குழுத்தலைவர்)
2) சகோ. அப்துஸ்ஸமத் (சனி, ஞாயிறு மட்டும்)
3) சகோ. டாக்டர் கானி ஷெய்க்
4) சகோ. இப்னு சுவூத்
5) சகோ. முத்துவாப்பா ஆகியோர்.
ரமளான் மாதம் முடிந்ததும் துரிதமாக நிதி திரட்டும் பணியை துவங்கப்போவதாக குழுவினர் அறிவிப்பு செய்தனர்.
4) உறுப்பினர் சந்தா மற்றும் உறுப்பினர் சேர்க்கை:
உறுப்பினர் சேர்க்கை மற்றும் சந்தா பாக்கிகளை வசூலிக்க கீழ்கண்ட செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1) சகோ. ஸ்மார்ட் அப்துல் காதர்
2) சகோ. எம்.டி.அலி
3) சகோ. கிதுரு முஹ்யித்தீன்
4) சகோ. அபூபக்கர் சித்தீக்
5) சகோ. நெட்காம் புகாரி
5) ஜகாத், ஸதக்கா திரட்டல்:
KCGCயின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உள்ளூர்வாசிகளுக்கு நல உதவி செய்யும் வகையில் நிதி திரட்டுவதற்கான பொறுப்பு அதன் பொருளாளரான சகோ. முஹம்மத் தம்பி (குளம்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு ஒத்தாசையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
6) KCGCயின் அடுத்த செயற்குழு கூட்டம்:
KCGCயின் அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி மக்ரிப் ஜமாஅத்துடன் சென்னை கிரீம்ஸ் ரோடு எஸ்.கே. பில்டிங் 3ஆவது தளத்தில் நடைபெறுமென்றும், செயற்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்குமாறும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி:
இவ்வாறாக கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன. இஃப்தார் - நோன்பு துறப்பு நேரம் நெருங்கியதையடுத்து, அதற்கான அமர்வில் அனைத்து உறுப்பினர்களும் தனித்தனியே பிரார்த்தனை செய்தனர்.
பின்னர், காயலின் முறைப்படி கஞ்சி மற்றும் பண்ட பதார்த்தங்களுடன் நோன்பு துறக்கப்பட்டு மக்ரிப் தொழுகையும் ஜமாஅத்துடன் (கூட்டாக) நடைபெற்று கூட்டம் இனிதே நிறைவுற்றது.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை KCGCயின் பொருளாளரான சகோ. முஹம்மத் தம்பி (குளம்) செய்திருந்தார்.
வல்ல ரஹ்மான் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம்காரியங்களை வெற்றியாக்கி ஈருலகிலும் நம் யாவரையும் மேன்மைப்படுத்துவானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
இவ்வாறு, KCGC அமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
KCGC அமைப்பின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |