வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், பெயர் நீக்குதல், பெயர் மற்றும் இதர விபரங்கள் திருத்தம் செய்தல் ஆகியவற்றினை பொதுமக்கள் ஆன்லைன் மூலமும் செய்யலாம். இதனை அங்கீகரிக்கப்பட்ட தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் மேற்கொள்ள அனுமதி வழங்கிடப்படவுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், பெயர் நீக்குதல், பெயர் மற்றும் இதர விபரங்கள் திருத்தம் செய்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதனை சரிபார்த்தல் மற்றும் அதற்கு நகல் எடுத்து வழங்குதல் தொடர்பான் சேவைகளை ஆன்லைன் மூலம் பொது மக்களுக்கு கீழ்க்கண்ட கட்டண விகிதத்தில் செய்து கொடுக்க விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சட்டப்பூர்வமாக செயல்படும் பிரவுசிங் சென்டர்களின் உரிமையாளர்கள் 8.8.2013க்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு செய்து தங்களது பிரவுசிங் சென்டர்களை அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் பதிவு மையங்களாக செயல்பட அனுமதி பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தகவல்:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
தூத்துக்குடி.
|