காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், ஆண்டுதோறும் ரமழான் 27ஆம் நாளன்று நள்ளிரவில் திக்ர் மஜ்லிஸ் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், இவ்வாண்டும் ரமழான் 27ஆம் நாளன்று (ஆகஸ்ட் 06) நள்ளிரவு 12.00 மணியளவில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ், இளைஞர் ஐக்கிய முன்னணி வளாகத்தில், குருவித்துறைப் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் எச்.பி.என்.ஷாஹ்ஸாத், “ரமழான் கடைசி பத்து நாட்களின் மகத்துவம்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூறினார். மஸ்ஜிதுல் ஆமிர் மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் துஆ ஓதினார். ஹாஃபிழ் பி.ஏ.முஹம்மத் உக்காஷா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
நிகழ்ச்சிகளனைத்திலும், குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இளைஞர் ஐக்கிய முன்னணியின் மூத்த நிர்வாகி எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டி.எம். தலைமையில் அங்கத்தினர் செய்திருந்தனர்.
இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) ரமழான் 27ஆம் நாளன்று நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |