நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை சார்பில், நகரிலுள்ள ஏழை-எளிய மக்களுக்கு அரிசி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ஆண்டுதோறும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, நகரிலுள்ள ஏழை - எளிய பொதுமக்களுக்கு அரிசி அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, இம்மாதம் 03ஆம் தேதி சனிக்கிழமை மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலக கட்டிடமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸில் வளாகத்தில், ஏழை மக்களுக்கு அரிசி அன்பளிப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
துஆவுக்குப் பின், கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, அரிசி அன்பளிப்பு வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளா ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, அரபி ஷாஹுல் ஹமீத், பெத்தப்பா சுல்தான், செய்யித் அஹ்மத் நெய்னா, எழுத்தாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, சமூக ஆர்வலர் ஹாஜி மஹ்மூது மானாத்தம்பி உள்ளிட்டோர் ஏழை மக்களுக்கு அரிசி வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின்போது, காயல்பட்டினத்தைச் சேர்ந்த 1500 ஏழை பொதுமக்களுக்கு தலா ஒன்றரை கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நகர நிர்வாகிகள் ஒருங்கிணைத்து செய்திருந்தனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற - ஏழைகளுக்கான அரிசி அன்பளிப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |