அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் - தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டு, பணிகள் பூர்த்தியடையும் நிலையிலுள்ளது.
இம்முகாமில், விடுபட்ட பொதுமக்களிடம் விபரங்கள் சேகரிப்பதற்காக இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஆதார் எண் வழங்கல் உள்ளிட்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) முகாம் குறித்த முக்கிய அறிவிப்பு!
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில், ஜூன் மாதம் முதல் ஆதார் எண் வழங்கல் உள்ளிட்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) பணிகள் வார்டு வாரியாக நடைபெற்று வருகிறது.
தத்தம் வார்டுகளில் இம்முகாம்கள் நடைபெற்றபோது, பல்வேறு காரணங்கள் காரணமாக அதில் கலந்துகொள்ள முடியாத பொதுமக்களுக்காக, இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் (வியாழன், வெள்ளி, சனி) சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமுக்கான டோக்கன்கள் - முகாம் நடைபெறும் நாட்களில், அன்றைய நாளுக்கான டோக்கன்கள் - காலை 08.30 மணி முதல் முகாம் நடைபெறும் இடத்தில் வழங்கப்படும்.
சிறப்பு முகாம் நடைபெறும் இடம்:
எல்.கே.மேனிலைப்பள்ளி, கூலக்கடை பஜார்.
நாள்:
ஆகஸ்ட் 08 (வியாழன்), 09 (வெள்ளி) மற்றும் 10 (சனி)
நேரம்:
காலை 10.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
இம்முகாமை பொதுமக்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |