காயல்பட்டினம் - வீரபாண்டியன்பட்டினம் சாலையில், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து எல்லைக்குள் அமைந்துள்ளது காட்டு மகுதூம் பள்ளி. மஹான் ஷஹீத் முத்து மகுதூம் வலிய்யுல்லாஹ் தர்ஹாவும், மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலும் அடுத்தடுத்து அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் ரமழான் மாதத்தின் 21ஆம் நாளன்று இங்கு இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழமையிலுள்ளது. அந்த அடிப்படையில், நேற்று (ஜூலை 31 புதன்கிழமையன்று) இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காட்டு மகுதூம் பள்ளி நிர்வாக ஆலோசனைக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத் பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கறிகஞ்சி, வடை வகைகள், குளிர்பானம் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தொழுகையை வழிநடத்தினார்.
கடந்த ஆண்டு இங்கு நடைபெற்ற சாதாரண இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹிஜ்ரீ 1432ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் இங்கு நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காட்டு மகுதூம் பள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
படங்கள்:
(ஹாஃபிழ்) H.M.முஹம்மத் அப்துல் காதிர் |