காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவின் வடமுனையில், ஆறாம்பள்ளித் தெரு, குறுக்கத் தெரு, கி.மு.கச்சேரி தெரு ஆகிய தெருக்களை அணைத்தாற்போல் அமைந்துள்ளது காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளிவாசல்.
நிர்வாகம்:
இப்பள்ளியின் தலைவராக ஹாஜி எஸ்.ஏ.கே.மஹ்மூத் நெய்னா, செயலாளராக எம்.ஏ.மஹ்மூத் என்ற பட்டறை மஹ்மூத் ஆகியோரும், 23 செயற்குழு உறுப்பினர்களும் சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் - பிலால்:
பள்ளியின் இமாமாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் வி.எஸ்.ஏ.முஹம்மத் அப்துல் காதிர் தலைமை இமாமாகவும், மவ்லவீ எம்.இசட்.முஹம்மத் அப்துல் காதிர் மஸ்லஹீ துணை இமாமாகவும் பணியாற்றி வருகின்றனர். பிலால் பொறுப்பை இவ்விருவரும் பகிர்ந்து செய்து வருகின்றனர்.
நோன்புக் கஞ்சி:
நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, இப்பள்ளியில், நாள்தோறும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. கஞ்சி தயாரிப்பிற்கென பள்ளி வளாகத்தில் மேற்கூரை அமைக்கப்பட்ட தனி இடம் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டது.
கஞ்சி வினியோகம்:
நாள்தோறும் தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சியை 150 முதல் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
இஃப்தார் - நோன்பு துறப்பு:
நாள்தோறும் இப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சுமார் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், வடை வகைகள், குளிர்பான வகைகள் உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
கஞ்சி வினியோகக் காட்சிகள்:
15.07.2013 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற நோன்புக் கஞ்சி வினியோகத்தின் படப்பதிவுகள் வருமாறு:-
இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்:
22.07.2013 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படப்பதிவுகள் வருமாறு:-
தராவீஹ் தொழுகை நிறைவுக் காட்சிகள்:
13.07.2013 அன்று இப்பள்ளியில் தராவீஹ் தொழுகை நிறைவுற்ற பின்னர், ‘தீன் தீன் முஹம்மத்’ என பாரம்பரிய முறைப்படி மஹல்லாவாசிகள் முழங்கிய காட்சிகள் வருமாறு:-
இப்பள்ளியின் கடந்தாண்டு இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இப்பள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |