சென்னை புரசைவாக்கம் பகுதியில் வாழும் காயலர்கள் சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் ரமழான் மாதம் தராவீஹ் தொழுகையை வி.எஸ்.ஏ. கட்டிடத்தில் (காயல் டெலிகாம்) நடத்தி வருகின்றனர்.
இவ்வாண்டு - காயல்பட்டினம் சதுக்கை தெருவை சார்ந்த ஹாபிழ் எம்.ஏ.சி. முஹம்மது இர்ஷாத் (த/பெ ஹெச்.எம். முஹம்மத் அப்துல் காதர்) மற்றும் தீவு தெருவை சார்ந்த ஹாபிழ் எம்.ஏ.கே. பைசல் அஹ்மத் (த/பெ எம்.எஸ்.ஏ. முஹம்மத் அப்துல் காதர்) - ஆகியோர் தொழுகை நடத்துகின்றனர்.
ஜூலை 26 பின்னேரம் சனி இரவு - பிறை 17 என்ற அடிப்படையில் இரவு 9:15 மணிக்கு இஷா தொழுகையும், அதனை தொடர்ந்து தராவீஹ் தொழுகையும் நடைபெற்றது. 10:15 மணிக்கு தஸ்பீஹ் தொழுகையும், வித்ரு தொழுகையும், பத்ரு சஹாபாக்களின் மௌலூதும் நடைபெற்றது.
பின்னர் திருவிடாங்கோட்டை நிஜாமுதீன் அஸ்ஹானி ஆலிம் பத்ரு சஹாபாக்களின் வரலாறு குறித்து - சுமார் 2.5 மணி நேரம் உரை நிகழ்த்தினார்.
இறுதியாக காயல்பட்டினம் களரி சாப்பாடு விநியோகம் நடைபெற்றது. வளாகத்திலேயே 50 பேர் சஹர் உணவு உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எம்.ஏ. செய்யத் அப்துல் காதர் (மாஸ்), வாவு மஸ்னவி, ஜி.ஆர்.எஸ். கனி, எம்.டி. மொஹுதூம் கண்டு சாஹிப், பி.ஏ. காதர் சுலைமான், கே.ஏ.ஆர். அஜ்மல் புஹாரி, எம்.என்.எல். சம்சுதீன், குளம் எம்.ஒ. ஜைனுலாப்தீன் உட்பட காயலர் பலர் இந்நிகழ்வுகளில் கலந்துக்கொண்டனர்.
தகவல்:
காயல் டெலிகாம் |