முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், அரிமா சங்கம் காயல்பட்டினம் கிளை ஆகியன இணைந்து, நோன்புப் பெருநாளை முன்னிட்டு - ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, இம்மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தின.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை), அரிமா சங்க நகர பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால், அதன் நிர்வாகச் செயலாளர் எம்.ஏ.இம்ரான், எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் எஸ்.எம்.நூஹ் ரியாஸ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் - காயல்பட்டினம் நகர அமைப்பாளர் அ.வஹீதா அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் 850 பயனாளிகளுக்கு புத்தாடைகளும், அரிசி ஆகியன வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின்போது, செய்கு ஹுஸைன் பள்ளிக்கு ஆம்ப்ளிஃபயர் கருவி வாங்குவதற்காக, காயல்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் அதன் தலைவர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் ரூபாய் 15 ஆயிரம் நன்கொடை தொகையை, பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
நகர அரிமா சங்க நிர்வாகி ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் நன்றி கூறினார். அரிமா சங்க செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.
படங்கள்:
ஃபாஸில் ஸ்டூடியோ
[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 20:12 / 29.07.2013] |