நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நாள்தோறும் இரவுத் தொழுகை நிறைவுற்றவுடன் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு நடத்தப்படுகிறது.
ஜூலை 25 இரவு நடைபெற்ற திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பை, மவ்லவீ மிஸ்பாஹுல் ஹுதா நடத்தினார். ஜூலை 26 அன்று (நேற்று) மவ்லவீ இக்பால் ஃபிர்தவ்ஸீ வகுப்பை நடத்தினார். இன்றிரவு வகுப்பையும் அவரே நடத்தவுள்ளார்.
திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்புகளுக்கான ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகங்கள் இணைந்து செய்து வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் ஐ.ஐ.எம். வளாகத்தில் நடைபெற்று வந்த இந்த திருக்குர்ஆன் தொடர் வகுப்பு, நடப்பாண்டில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றவுள்ள மார்க்க அறிஞர்களின் பெயர், அவர்களது உரை இடம்பெறும் நாள் உள்ளிட்ட விபரங்களடங்கிய பட்டியல் வருமாறு:-
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரமழான் மாதம் முழுக்க நாள்தோறும் இரவில் நடைபெறும் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள், லுஹர் தொழுகைக்குப் பின் நடைபெறும் மிஷ்காத் வகுப்பு உள்ளிட்டவை, ஐ.ஐ.எம். டிவி உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையிலும், அதன் http://iimkayal.org/iimtv.asp என்ற இணையதள பக்கத்திலும் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன், ஐ.ஐ.எம். டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் இணையதளம் வாயிலாகக் காணவும் சிறப்பேற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல்:
S.அப்துல் வாஹித்
மற்றும்
M.A.அப்துல் ஜப்பார் |