காயல்பட்டினம் புதுப்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சார்பில், ஸஹர் உணவு - களறி சாப்பாடு ஏற்பாடு, புதுப்பள்ளி வெளி வளாகத்தில் நேற்றிரவு (ஜூலை 25) செய்யப்பட்டிருந்தது.
இந்த ஏற்பாட்டின் கீழ், களறிக் கறி, கத்திரிக்காய் பருப்பு, புளியாணம், சோறு ஆகியவற்றைக் கொண்ட ஒரு சஹன் (தட்டு) உணவுக்கு ரூபாய் 300 கட்டணமாகப் பெறப்பட்டு, ஸஹன் சாப்பாடு வினியோகிக்கப்பட்டது. சுமார் 150 பேர் ஸஹர் உணவாக ஸஹன் சாப்பாடு பெற்றுச் சென்றனர்.
ஏற்பாட்டுப் பணிகள் நேற்று மாலையில் துவங்கின. வினியோகப் பணிகள் நேற்றிரவு 09.00 மணிக்குத் துவங்கி, நள்ளிரவு 01.00 மணி வரை நடைபெற்றது.
அனைத்து ஏற்பாடுகளையும், அப்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து செய்திருந்தனர்.
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 9:40 pm / 26.7.2013] |