அமெரிக்காவின் NASA நிறுவனம், ஐரோப்பாவின் ESA நிறுவனம், இத்தாலி நாட்டின் ASI நிறுவனம் ஆகியவற்றால் சனி கிரகத்தை (SATURN) ஆய்வு செய்ய 1997 ஆம் ஆண்டு கஸ்ஸினி (CASSINI) விண்கலம் வானில் ஏவப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் இந்த விண்கலம் - சனி கிரகத்தை ஆய்வு செய்து வருவதுடன், வியாழன் (JUPITER) கிரகம் உட்பட சூரிய குடும்பத்தின் இதர அம்சங்களையும் ஆய்வு செய்து வருகிறது.
தற்போது சனிக்கிரகத்தை சுற்றி வரும் கஸ்ஸினி விண்கலம் - ஏறத்தாழ 100 கோடி மைல் தூரத்தில் இருந்து பூமியையும், அதனை சுற்றிவரும் சந்திரனையும் படம்பிடித்துள்ளது. இந்த புகைப்படம் ஜூலை 19 அன்று எடுக்கப்பட்டது.
பொதுவாக - சூரியன் அருகாமையில் இருக்கும் என்பதால் - இவ்வளவு தூரத்தில் இருந்து பூமியை புகைப்படம் எடுப்பது கடினம் ஆகும்.
ஜூலை 19 அன்று 100 கோடி மைல் தூரத்தில் இருந்து பூமியும், சந்திரனும் ...
ஜூலை 19 அன்று 100 கோடி மைல் தூரத்தில் இருந்து - சனிக்கிரக வளையங்கள் வாயிலாக பூமி ... (வலதுபுறம் - கீழே)
இந்த புகைப்படம் எடுக்கப்படும் நாளும், நேரமும் முன்னரே பொது மக்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டது. மேலும் - புகைப்படம் எடுக்கப்படும் நேரத்தில் விண்ணை நோக்கி கையசைக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இவ்வளவு தூரத்தில் இருந்து பூமி புகைப்படம் எடுக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
1990 ஆம் ஆண்டு வாயேஜர் 1 விண்கலம் - சூரிய குடும்ப (SOLAR SYSTEM) எல்லையை தாண்டி, 370 கோடி மைல் தூரத்தில் இருந்து எடுத்த பிரபல PALE BLUE DOT படத்தில் பூமி ...
2006 ஆம் ஆண்டு கஸ்ஸினி விண்கலம் - 100 கோடி மைல் தூரத்தில் இருந்து - சனிக்கிரக வளையங்கள் வாயிலாக எடுத்த படத்தில் பூமி ...
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 25.7.2013 / 6:25 pm] |