ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபீயில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் “பாரதி நட்புக்காக” தமிழமைப்பின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, அபூதபீயிலுள்ள இந்திய சமூகக் கூடத்தின் (ISC) சிற்றரங்கில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கலீலுர்ரஹ்மான் முன்னிலை வகித்தார்.
சென்னை அல்ஹஸனாத் கல்வி மையத்தின் முதல்வர் - அஃப்ஸலுல் உலமா மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் பாக்கவீ - மனித நேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
உரையைத் தொடர்ந்து, இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரீத்தம்பழம், தண்ணீர், பழ வகைகள், குளிர்பான வகைகள் என பல்வகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
பின்னர், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் அமர்வு துவங்கியது. அதில், திருவனந்தபுரம் அரசு உயர்கல்வி சிறப்பு மையத்தின் பல்கலைக் கழகக் கல்லூரி - தமிழ்த்துறை ஆய்வு மைய தலைவர் முனைவர் மீரான் பிள்ளை சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிகளனைத்தும் நிறைவுற்ற பின்னர், அனைவருக்கும் பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
அனைத்து நிகழ்வுகளிலும், நோபில் மெரைன் ஹாஜி ஷாஹுல் ஹமீத், அய்மான் ஜாஃபர் உள்ளிட்ட பிரமுகர்களும், காயலர்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
அபூதபீ - ஐக்கிய அரபு அமீரகம் |