தூத்துக்குடி மாவட்டத்தில் பாசனப் பரப்புகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன அமைப்பிலுள்ள நேரடி பாசனப் பரப்புகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால் கால்வாய்களில் பாசனத்திற்கு 26.7.2013 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களிலுள்ள 7,524 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9. |