அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை 1 வது வார்டு முதல் 12 வது வார்டு வரை முழுமையாகவும், 18 வார்டில் பகுதி அளவிலும் பணி நிறைவு பெற்றுள்ளது.
ஜூலை 20 - சனிக்கிழமை அன்று 13வது வார்டு பணிகள் துவங்கின. இவ்வார்டுக்கான பணிகள் நாளை (ஜூலை 24) புதன் கிழமை நிறைவடையும் என்றும், அதற்கு முன்னர் - வார்டு பொது மக்கள், இறுதி நாளான நாளை அன்று முகாமில் கலந்துக்கொண்டு, தங்கள் விபரங்களை தவறாமல் பதிவு செய்யும்படியும் 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீன் கேட்டுக்கொண்டுள்ளார். |