ஹாங்காங் நாட்டின் வாங்சாய் நகரில் உள்ளது மஸ்ஜித் அம்மார் பள்ளிவாசல் மற்றும் உஸ்மான் ரம்ஜு ஸாதிக் இஸ்லாமிய நிலையம். இவை சீன மக்களால் நிர்வகிக்கப்பட்டு வருவனவாகும்.
வாங்சாய் நகரிலும் காயலர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் ரமழான் - நோன்பு காலங்களில் இப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வர்.
அதுபோல, ஹாங்காங் கவ்லூன் வாழ் காயலர்களும் - ஒரு மாற்றத்திற்காக வாங்சாய் நகருக்குப் பயணித்து வந்து, இப்பள்ளியில் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது வாடிக்கை. இஃப்தார் நிகழ்ச்சியில், சீன உணவுப் பழக்கவழக்கப்படி அனைவருக்கும் உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்படும்.
அந்த அடிப்படையில், இம்மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, ஹாங்காங் கவ்லூன் வாழ் காயலர்கள் சிலர் வாங்சாய் நகரிலுள்ள மஸ்ஜித் அம்மார் எனும் இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காட்சிகள்:-
தகவல் & படங்கள்:
காதர் சாமுனா |