தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. வார்டு, வட்ட கிளை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்ளும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தி.மு.கழகத்தின் 14–வது பொதுத் தேர்தலின் ஆரம்ப கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டக்கிளை, வார்டு
கிளைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி நகரம், ஒன்றியங்கள் வாரியாக தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு
உள்ளன.
வருகிற 23–ந் தேதி புதூர் ஒன்றியத்துக்கான வேட்பு மனுக்களை புதூர் கம்மவார் திருமண மண்டபத்திலும், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பகுதிகளில் உள்ளவர்கள் வேட்பு
மனுக்களை புதியம்புத்தூர் சுடலைமணிநாடார் மண்டபத்திலும், கோவில்பட்டி ஒன்றிய பகுதி வேட்பு மனுக்களை கோவில்பட்டி லட்சுமி மகாலிலும்
கொடுக்கலாம்.
24–ந் தேதி திருச்செந்தூர் ஒன்றியத்துக்கான வேட்பு மனுக்களை ஐ.எம்.ஏ. மகாலிலும், உடன்குடி ஒன்றியத்துக்கான மனுக்களை உடன்குடி ஆர்.எஸ்.யு. திருமண
மண்டபத்திலும், சாத்தான்குளம் ஒன்றியத்துக்கான மனுக்களை சாத்தான்குளம் அந்தோணி திருமண மண்டபத்திலும், ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்கான மனுக்களை
நாசரேத் விஜய மகாலிலும், ஆத்தூர் பேரூர் மற்றும் சுற்று வட்டாரத்துக்கான வேட்பு மனுக்களை கலைஞர் அறிவாலயத்திலும் கொடுக்கலாம்.
25–ந் தேதி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்துக்கான வேட்பு மனுக்களை ஏரல் ராஜம்மாள் திருமண மண்டபத்திலும், கருங்குளம் ஒன்றியத்துக்கான மனுக்களை
செய்துங்கநல்லூர் சமுதாய நலக்கூடத்திலும், காயல்பட்டினம் நகரத்துக்கான வேட்பு மனுக்களை காயல்பட்டினம் நகர தி.மு.க. அலுவலகத்திலும், விளாத்திகுளம்
ஒன்றியத்துக்கான மனுக்களை விளாத்திகுளம் ஆர்த்தி மகாலிலும் வழங்கலாம்.
26–ந் தேதி கயத்தாறு ஒன்றியத்துக்கான வேட்பு மனுக்களை கயத்தாறு சமுதாய நலக்கூடத்திலும், கோவில்பட்டி நகரத்துக்கான மனுக்களை கோவில்பட்டி
சத்தியபாமா திருமண மண்டபத்திலும், தூத்துக்குடி ஒன்றியத்துக்கான மனுக்களை தூத்துக்குடி கலைஞர் அரங்கிலும் அளிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தகவல்:
தினத்தந்தி |