Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:29:29 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11319
#KOTW11319
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 18, 2013
ரமழான் 1433: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் நோன்புக் கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3850 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் காட்டு தைக்கா தெரு - தைக்கா தெரு - சிவன்கோயில் தெரு - பாக்கர் காலனி - தருவை ஆகிய தெருக்களுக்கு நடுவில் அமைந்துள்ளது, மஸ்ஜித் அல்அரூஸ் எனும் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளிவாசல்.





இடநெருக்கடி காரணமாக, இப்பள்ளியின் பழைய கட்டிடம் அகற்றப்பட்டு, புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, 20.07.2012 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகையுடன் புதிய கட்டிடத்தில் வணக்க வழிபாடுகளும் துவங்கின.

இப்பள்ளியின் தலைவராக ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் சுல்தான், செயலாளராக ஹாஜி எஸ்.எம்.பி.மூஸா நெய்னா ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.

இப்பள்ளியின் இமாமாக வடகரையைச் சேர்ந்த முஹம்மத் வலிய்யுல்லாஹ் என்பவரும், பிலாலாக அப்துர்ரஹ்மான் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை, தைக்கா தெருவைச் சேர்ந்த ஜாஃபர் ஸாதிக் என்பவரது மகன் ஹாஃபிழ் ஜெ.எஸ்.செய்யித் அஹ்மத் வழிநடத்துகிறார்.

இப்பள்ளியில், வழமை போல இவ்வாண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, ஜமாஅத்திற்குட்பட்ட குடும்பத்தினருக்கு ஊற்றுக்கஞ்சி வினியோகிக்கப்படுவதுடன், நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இஃப்தார் நிகழ்ச்சியில் 40 பேர் முதல் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், கஞ்சி, வடை, தண்ணீர் ஆகியன பரிமாறப்படுகிறது.

நடப்பாண்டு கஞ்சி கமிட்டியினராக ஏ.ஷாஹுல் ஹமீத், ஜெ.எம்.காதர், எஸ்.ஐ.அஹ்மத் அப்துல் காதிர், எஸ்.ஏ.முஹம்மத் சுல்தான் (தலைவர்), கே.எம்.ஸாலிஹ், எஸ்.டி.ஜெய்னுல் ஆப்தீன், எம்.எம்.மஹ்மூத் ஆகியோரும், கஞ்சி வினியோகப் பொறுப்பாளர்களாக எம்.ஏ.காதிர் ஒலி, ஜெ.எம்.கிதுறு முஹம்மத் ஆகியோரும் சேவையாற்றி வருகின்றனர்.

நடப்பாண்டில்,
ரூபாய் 7 ஆயிரத்து 500 செலவு மதிப்பீட்டில் கறி கஞ்சியும்,
ரூபாய் 6 ஆயிரத்து 500 செலவு மதிப்பீட்டில் காய்கறி கஞ்சியும்,
ரூபாய் 5 ஆயிரத்து 500 செலவு மதிப்பீட்டில் வெண்கஞ்சியும்
தயாரிக்கப்படுகிறது.

நாள்தோறும் வினியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை, இப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர். இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், 40 முதல் 80 பேர் வரை நாள்தோறும் கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.

15.07.2013 புதன்கிழமையன்று நடைபெற்ற நோன்புக் கஞ்சி வினியோக (ஊற்றுக் கஞ்சி) படக்காட்சிகள் வருமாறு:-







11.07.2013 அன்று நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படக்காட்சிகள் வருமாறு:-









இப்பள்ளியின் கடந்த ஆண்டு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

பள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [18 July 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 28751

சுபக்கதுல்லா காக்கா தூக்கு சட்டி போதுமா....??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [19 July 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 28761

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ்.அரூஸிய்யா பள்ளியின் கம்பீரமான அழகிய தோற்றத்தை பார்க்கும் போது.நாம் வெளிநாட்டில் இருக்கும் நினைப்பு தான் தோன்றுகிறது ......அவ்வளவு அற்புதமான வடிவமைப்பு ...........

அருமை சகோதரர் .சிபக்கத்துல்லா அவர்களிடம் இருக்கும் தூக்கை பார்க்கும்போது நமக்கே சிரிப்புடன் கலந்த ....ஒரு சோகமும் நமக்கு தோண்டுகிறது ....நாம் இந்த அருமை சகோதரர் அவர்களுக்கு .இந்த சிறப்பான நோன்பு நேரத்தில் உதவிகள் செய்தால் நல்லதுதானே .நாங்கள் சிறுவர்களாக இருந்த .படிக்கும் காலத்தில் இவரிடம் புளியங்கா வாங்கி சாப்பிட்ட பழைய நினைவுகள் வருகிறது ...... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வாங்கிங்! (?!)  (18/7/2013) [Views - 3652; Comments - 8]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved