ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் 7 வது பொதுக்குழு கூட்டம் மற்றும் 4 ஆம் ஆண்டு துவக்க விழா ஏப்ரல் மாதம் 27 ம்
தேதி நடைபெற்றது. இது குறித்து மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஷாகுல் ஜிப்ரி கறீம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் ஏழாவது பொதுக்குழுக்கூட்டம் மற்றும் நான்காம் ஆண்டு தொடக்கவிழா, இம்மாதம் 27ஆம் தேதி, (ஏப்ரல் மாதம் 27 ம்
தேதி) மில்டன் கெய்ன்ஸ் மாநகரில் அமைந்துள்ள பென்ட்க்ராப் சந்திப்பு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
கூட்ட நிகழ்வுகள்:
கூட்டத்திற்கு மன்றத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் லபீப் கிராஅத் ஓதி
கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
பின்னர், மன்றத் தலைவரும், கூட்டத் தலைவருமான டாக்டர் செய்யித் அஹ்மத், மன்ற துணைத்தலைவர் பொறியாளர் அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.
இப்பொதுகுழுவின் நிகழ்ச்சிகளை மன்றத்தின் செயலாளர் ஷாகுல் ஜிப்ரி கரீம் தொகுத்து வழங்கினார்.
தலைவர் உரை:
பின்னர் கூட்டத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமையுரையாற்றினார். அதில் மன்றத்தின் கடந்த கால பணிகள் குறித்தும், எம் மன்றத்தின் திட்டமான
முதலுதவி மற்றும் 'Kayal Academic Forum' குறித்தும் அதற்கு கிடைத்த வரவேற்பு குறித்தும் மன்றத்தின் உறுப்பினர்களுக்கு மிக அழகுடன் விளக்கினார்கள்.
துணை தலைவர் உரை:
பின்னர் மன்ற துணைத்தலைவர் பொறியாளர் அபூபக்கர் அவர்கள் நம் மன்றத்தால் நடத்தப்படும் திட்டங்கள் மிகுந்த தரத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தையும்,
அதன் மூலம் நாம் பிற்காலத்தில் அடைய இருக்கிற பலன்களையும் அழகுடன் எடுத்துரைத்தார்கள்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், சென்ற கூட்ட நடப்புகள் மற்றும் மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் சதக்கதுல்லாஹ் குளம் அவர்கள் விளக்கிப் பேசினார்.
மன்றம் சார்பில் நடைபெற்ற முதலுதவி முகாம் குறித்தும், அதன் தொடர் பயிற்சி முகாம்களை எவ்வாறு செயல்படுத்துவது என்றும் விளக்கம் அளித்தார்கள்.
கலந்துரையாடல்:
பின்னர் பொருளாளர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்ற உறுப்பினர்கள் சிறு குழுக்களாக பிரிந்து மன்றத்தின் அடுத்த திட்டங்கள் குறித்து ஆலோசனை
நடத்தினார்கள். பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மன்றத்தின் அடுத்த திட்டங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.
மன்றத்தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் அவர்களின் திட்டமான காயல் கல்வி அறிவு மன்றம் - 'Kayal Educational Forum' குறித்தும், அதை எவ்வாறு
செயல்படுத்துவது என்றும் விளக்கம் அளித்தார்கள். அந்த திட்டத்தை உறுப்பினர்கள் அனைவரும் சிறு விவாதத்துக்கு பின்னர் ஆமோதித்து ஏற்றனர்.
பிறகு மதிய தொழுகைக்கு பின்னர் உணவு விருந்தோம்பல் நடைபெற்றது.
உணவு இடைவேளைக்கு பின்னர் மழலை செல்வங்களின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதனை மன்றத்தின் பெண்கள் பிரிவு பிரிதிநிதி Mrs. Azzah Noohu
Niyaz அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனை தொடர்ந்து சிறார்களின் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு
அளிக்கப்பட்டது.
நகர மரபுச்சொல் வினாடி-வினா போட்டி:
சிறார்களின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து, வினாடி-வினா போட்டி நடைபெற்றது. மன்றத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின்
மரபுச் சொல்வழக்கை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட போட்டி, உறுப்பினர்களிடையே மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்து, சில மணி
நேரங்கள் ஊரிலேயே இருந்த அனுபவத்தைப் பெற்றுத் தந்தது.
தமிழ் மொழித் தொடர்பு முற்றிலும் அற்றுப்போன ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட்டால், வளரும் தலைமுறைக்கு
தாய்மொழியுடன் தொடர்பிருந்துகொண்டே இருக்கும் என்பது அங்கு அனைவராலும் உணரப்பட்டது. போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மன்றத்தின் புதிய நிர்வாக குழு (2013-2016) பின்வருமாறு தேர்ந்து எடுக்கப்பட்டது.
மன்ற ஆலோசகர்:
பொறியாளர் அபூபக்கர்
தலைவர்:
டாக்டர் செய்யித் அஹ்மத்
துணைத்தலைவர்:
அப்துல் மத்தீன் லபீப்
செயலாளர்:
டாக்டர் அபூ தம்பி
துணைச்செயலாளர்:
(1) இம்தியாஸ்
(2) ஹஸன் மரைக்கார்
பொருளாளர்:
குளம் சதக்கத்துல்லாஹ்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:
(1) செய்யித் மரைக்கார்
(2) ஸிராஜ் மஹ்மூத்
(3) நூஹு நீயாஸ்
(4) ஷாகுல் ஜிப்ரி கரீம்
இறுதியாக பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1:
நகராட்சி மன்றத்தில் நிகழ்த்து வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு அமைக்கப்பட்ட 'சமாதான குழுவில்' இடம் பெற்று தனது உடல் உழைப்பை ஊரின்
ஒற்றுமை காக்க செயல்பட்ட எம் மன்றத்தின் தலைவர் மருத்துவர் எஸ். ஒ. செய்யது அஹமது மற்றும் அதில் ஈடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
இப்பொதுக்குழு தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்ளுகின்றது.
தீர்மானம் 2:
காயல்பட்டினம் ஐக்கிய பேரவையுடன் அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கு நல்ல புரிந்துணர்வு மற்றும் செயல்பாட்டினை அதிகரிக்கும் நோக்கில், ஒரு வரைவு
திட்டத்தை உருவாக்க அனைத்துலக காயல் நல மன்றங்களை அணுகுவதென்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3:
சமாதான குழுவின் பரிந்துரைகளை ஏற்று கொண்டு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து காயல் மாநகரின் ஒற்றுமைக்கு வழிகாட்டிய காயல்பட்டினம் ஐக்கிய
பேரவையை இப்பொதுக்குழு பாராட்டுகின்றது. மேலும் அவர்களின் புதிய இணையதளமான www.kayalunited.com மென்மேலும் சிறக்க இப்பொதுக்குழு
வாழ்த்துகின்றது.
தீர்மானம் 4:
காயல் மாநகர பெண் கல்வியின் தந்தை என்று அழைக்கப்படும் அல்ஹாஜ் A.K. ஷாகுல் ஹமீது ஹாஜியார் அவர்களின் கல்வி சேவையை நினைவுபடுத்தும்
முகமாக தீவுத் தெரு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பெயரை 'A.K. ஷாகுல் ஹமீது ஹாஜியார் நினைவு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி' என
மாற்றுமாறு கல்வித்துறைக்கு மனு அளிப்பது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. இம்மனுவில் காயல் மாநகர அனைத்து பொது நல, சமுதாய மற்றும்
அரசியல் அமைப்புகளின் அங்கீகாரத்தை பெருவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5:
காயல் மாநகர இணையதள வரிசையில் புதிதாக கால் பதித்துள்ள www.kayaltimes.com, www.kayalconnection.com மற்றும் www.kayalthanthi.com மென்மேலும் வளர
இப்பொதுக்குழு வாழ்த்துகின்றது. அனைத்து காயல் மாநகர இணையதளங்களுக்கும் எம் மன்றத்தின் செய்திகளை எந்த வித பாகுபாடுகள் இன்றி வழங்குவதென்றும்
தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 6:
மன்றப் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்ட மன்றத்தின் வரவு-செலவு (2012-2013) கணக்கறிக்கையை இப்பொதுக்குழு ஒருமனதாக அங்கீகரிகின்றது.
தீர்மானம் 7:
மன்றத்தின் அடுத்த கூட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று நடத்துவதென தீர்மானிக்ப்பட்டது. நிகழ்விடம் குறித்து விரைவில்
தெரிவிக்கப்படும்.
தீர்மானம் 8:
எமது மன்றத்தின் முதலதுவி பயிற்சி முகாமை தொடர்ச்சியாக வருடம் ஒரு முறை என்பதுக்கு பதிலாக வருடம் மூன்று முறை நடத்துவதென்றும், (கே.எம்.டி.
மருத்துவமனையில் உள்ள டயமண்ட் உள்ளரங்கம்) இப்பயிற்சி தொடர்ந்து நடைபெற ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் கே.எம்.டி மருத்துவமனையின் தலைவர்
மருத்துவர் அஷ்ரப் அவர்களுக்கும் மற்றும் இம்முகாமை நடத்தி வரும் டாக்டர் முகம்மது அபூபக்கர் அவர்களுக்கும் மற்றும் இம்முகாம் சிறப்பான முறையில் நடக்க
உறுதுணையாக இருக்கும் கே.எம்.டி. மருத்துவமனையின் மேளாளர் லத்தீப் அவர்களுக்கும் எம் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை உரித்தாகுகின்றோம்
.
தீர்மானம் 9:
எமது மன்றத்தின் கல்வி திட்டமான 'KAYAL ACADEMIC FORUM (KAF)' தற்பொழுது 100கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுடன், மாதம் ஒரு முறை, இறுதி வாரம்
சனிக்கிழமைகளில் சொளுக்கர் தெருவில் அமைந்துள்ள 'KAYAL COMMUNITY COLLEGE' உள்ளரங்கில் நடைபெற்று வருகின்றது. இத்திட்டம் நடைபெற உறுதுணையாக
இருக்கும் கல்லூரியின் முதல்வர் புஹாரி சார் அவர்களுக்கும் மற்றும் அனைத்து பள்ளி கூடங்களின் நிர்வாகிகள் / முதல்வர்களுக்கு இப்பொதுக்குழு தனது
நன்றியினை தெரிவித்து கொள்கின்றது.
தீர்மானம் 10:
நமது காயல் மாநகரில் புதிதாக அமையுள்ள இரண்டாம் குடிநீர் திட்டம், துணை மின் நிலையம் மற்றும் உர கிடங்கு அமைய உறுதுணையாக இருந்த காயல்
மாநகர தனவந்தர்கள், காயல்பட்டினம் ஐக்கிய பேரவை (Kayalpatnam Muslim United Council) மற்றும் சென்னை காயல்பட்டினம் ஐக்கிய பேரவையை (Kayalpatnam United
Association - Chennai) இப்பொதுக் குழு மனதார பாராட்டுகின்றது.
தீர்மானம் 11:
மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்று நமது காயல் மாநகரின் பெருமையை பறைசாற்றிய எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு இப்
பொதுக்குழு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கின்றது.
தீர்மானம் 12:
காயல் மாநகரின் சுற்று சுழல்லை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் காயல்பட்டினம் சுற்று சுழல் அமைப்பை (KEPA), இப்பொதுக் குழு மனதார
பாராட்டுகின்றது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |