எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற அல்ஜாமிஉல் அஸ்ஹர் என்றழைக்கப்படும் அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் ஹாஃபிழ் கே.எம்.செய்யித் இஸ்மாஈல், ‘மவ்லவீ’ பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த பி.எஸ்.கிழுறு முஹ்யித்தீன் - எம்.எஸ்.அஹ்மத் அலீ ஃபாத்திமா தம்பதியின் மகனான இவர், கேரள மாநிலம் - கோழிக்கோட்டிலுள்ள ஸக்காஃபத்துஸ் ஸுன்னிய்யா அரபிக் கல்லூரியில் 6 ஆண்டுகள் கல்வி பயின்று, ‘ஷாநவியா’ பட்டமும், பி.ஏ. பட்டமும் பெற்றார்.
அக்கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் 96 சதவிகித மதிப்பெண்கள் பெற்று, சிறப்புத் தேர்ச்சி (கட் ஆஃப்) மதிப்பெண் பெற்றவராக இவர் ஆனதையடுத்து, மெரிட் முறையில் தேர்வு செய்யப்பட்டு, கல்லூரியின் சார்பிலேயே எகிப்து – கெய்ரோவிலுள்ள அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு ஓராண்டு பயின்று, ‘மவ்லவீ அஸ்ஹரீ’ பட்டமும், ஹாஃபிழ், காரீ மற்றும் எம்.ஏ. பட்டங்களும் பெற்றுள்ளார்.
தகவல்:
K.M.T.சுலைமான் |