வழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு இன்னும் 8 நாட்களுக்கு அனுசரணை கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ‘முத்துச்சுடர்‘ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் ஆகியோரிணைந்து வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நமது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமை போன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கறிகஞ்சிக்கு ரூ.6,000/- என்றும்,
வெண்கஞ்சிக்கு ரூ.4,000/- என்றும்
நாளொன்றுக்கு அனுசரணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நமதூரின் அனைத்துப் பகுதி மக்களிடமிருந்தும் அனுசரணைகள் எதிர்பார்க்கப்படுவதாக, இம்மாதம் 11ஆம் தேதியன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனையடுத்து, நமதூரின் பல பகுதிகளைச் சேர்ந்த நல்லுள்ளங்கள் ஆர்வத்துடன் முன்வந்து அனுசரணையளித்து வருகின்றனர்.
இன்னும் 8 நாட்களுக்கு மட்டும் அனுசரணை தேவைப்படுகிறது. எனவே, அன்புச் சகோதர-சகோதரிகள் தேவைப்படும் இந்த அனுசரணைகளை விரைவாக வழங்கியுதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அனுசரணை செய்ய விரும்புவோர்,
செயலாளர்
‘முத்துச்சுடர்‘ என்.டி.இஸ்ஹாக் லெப்பை
(கைபேசி எண்: +91 99653 34687)
பொருளாளர்
கோமான் மீரான்
(கைபேசி எண்: +91 97903 09149)
ஆகியோரைத் தொடர்புகொண்டு, உங்கள் மேலான அனுசரணையை உறுதி செய்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
வங்கி மூலம் அனுசரணையளிக்க விரும்புவோர்,
K.ABDUL RAHMAN, N.T.ISHAK, N.MOHIDEEN MEERAN
Account Number: 615301502714
ICICI Bank, Kayalpatnam Branch
என்ற வங்கிக் கணக்கிற்கு, ‘Nonbu Kanji Sponsor’ என்று குறிப்பிட்டு அனுப்பித் தர அன்புடன் வேண்டுகிறோம்.
தேவையான அனுசரணைகள் முழுமையாகப் பெறப்பட்டவுடன் அது செய்தியாகத் தரப்படும் என்பதையும் அன்புடன் அறியத் தருகிறோம்.
கருணையுள்ள அல்லாஹ் நம் யாவரின் நற்கருமங்களையும் கபூல் செய்து, ஈருலக நற்பேறுகளை நமக்கு நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, கடற்கரை முஹ்யித்தின் பள்ளியின் தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ‘முத்துச்சுடர்‘ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் ஆகியோரிணைந்து வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |