நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நாள்தோறும் இரவுத் தொழுகை நிறைவுற்றவுடன் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு நடத்தப்படுகிறது.
இம்மாதம் 11, 12 தேதிகளில் நடைபெற்ற திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பை, மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் உமரீ நடத்தினார். நேற்று (ஜூலை 13) நடைபெற்ற வகுப்பை, ஸதக்கத்துல்லாஹ் உமரீ நடத்தினார். (இம்மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறும் அனைத்து வகுப்புகளையும் அவரே நடத்தவுள்ளார்.)
இரவுத் தொழுகையில் பங்கேற்ற பொதுமக்கள் இவ்வகுப்பில் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகங்கள் இணைந்து செய்து வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் ஐ.ஐ.எம். வளாகத்தில் நடைபெற்று வந்த இந்த திருக்குர்ஆன் தொடர் வகுப்பு, நடப்பாண்டில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றவுள்ள மார்க்க அறிஞர்களின் பெயர், அவர்களது உரை இடம்பெறும் நாள் உள்ளிட்ட விபரங்களடங்கிய பட்டியல் வருமாறு:-
ஜூலை 10 அன்று நடைபெற்ற திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
[படங்கள் இணைக்கப்பட்டது @ 03:58 / 15.07.2013] |