இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் மீதி தொகையை ஜூலை 27 க்குள் செலுத்திட வேண்டும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதி தொகை விபரங்கள் - பயணியர் இந்தியாவில் இருந்து புறப்படும் நகரம், சவுதியில் அவர்கள் தேர்வு செய்துள்ள தங்கும் இடம் வகை வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
பயணியர் கட்டணம் சவுதி ரியால் 1 இன் மதிப்பு ரூபாய் 16.0729 என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயணியர் ஹஜ் பயணம் மேற்கொள்ள புறப்படும் முன் வழங்கப்படும் - செலவுக்கான 2100 சவுதி ரியால் மட்டும், சவுதி ரியால் 1 இன் மதிப்பு ரூபாய் 14.98 என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சலுகை விமான கட்டணமாக இவ்வாண்டு ரூபாய் 28,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயணியர் முன் பணமாக 76,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு மதினாவில் உணவுக்கு ஏற்பாடு செய்ய இந்திய ஹஜ் குழு திட்டமிட்டுள்ளது. அத்திட்டம் முழுமை பெறும் பட்சத்தில் - சவுதி ரியால் 2100 இல் குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டே, பயணியருக்கு - இந்தியாவில் இருந்து புறப்படும் முன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து புறப்படுபவர்களுக்கான கட்டணம்...
கைக்குழந்தைகளுக்கான கட்டணம்...
சலுகைக்கு தகுதியில்லாத (ஏற்கனவே ஹஜ் செய்தவர் இம்முறை மற்றொரு பயணியருக்கு துணையாக ஹஜ் செய்கிறார்) பயணியருக்கான விமான கட்டணம்...
|