வரும் ரமழான் - நோன்பு பருவத்தையடுத்து, ஷவ்வால் மாதம் 06ஆம் நாளுக்குப் பிறகு (6 நோன்பு பருவம் கழிந்த பின்) காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் முவ்வொலி நாதாக்கள் ட்ரஸ்ட் சார்பில், “மக்தப் சுபுஹானிய்யா” என்ற பெயரில், மாணவர்களுக்கான இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்விப் பிரிவு துவக்கப்படவுள்ளது.
இந்நிறுவனத்தின் சொந்த பாடத்திட்டத்தின்படி, தஃப்ஸீர், அக்லாக், ஃபிக்ஹு, தஜ்வீத் உட்பட பல பாடப்பிரிவுகளைக் கொண்டு இந்த மக்தப் இயங்கவுள்ளது.
இந்த மக்தப் பிரிவில் சேர மாதாந்திர கல்விக் கட்டணம் கிடையாது என்றும், சீருடை, புத்தகங்கள், பள்ளிப் பை அனைத்தும் மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படவுள்ளதாகவும், சில நிபந்தனைகளுக்குட்பட்டு மாணவர்களுக்கு சைக்கிளும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் மக்தப் சுபுஹானிய்யா நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. |