என்றோ அடித்த அலைகளின் ஓசை காது மடல்களையும், அன்றே
கரைந்து போன நுரை மீண்டும் இதயத்தையும் நனைக்கிறது.
காரணம் நினைவலைகளை மீட்டும் கரங்களுக்குச் சொந்தக்காரர்
நண்பர் ரஃபீக்...
இந்தக் கட்டுரையை வாசிக்கும் நேரத்தில் உலப்பி
ஜெய்னுல் ஆப்தீன் காக்கா அவர்களின் டங்கா ஓசை மனதை மையம் கொள்கிறது.
எங்கள் பகுதி கௌதியா மற்றும் ரிஜ்வான் சங்கத் தோழர்கள் சஹர் நேரத்தில் டங்கா ஒலியுடன் "யாரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே" என்ற மர்ஹூம் ஆலிம் கவிஞர் நூஹுத் தம்பி ஜுமானி அவர்களது அழகிய பாடலையும், காயல் பிறைக்கொடியான் தோழப்பா மர்ஹூம் எஸ்.எம்.பி. அவர்களின்
"தீன் இஸ்லாத்தின் சார்பில்
உள்ளோரே நோன்பு நோற்பீரே"
போன்ற அபூர்வமான பாடல்களையும் பாடி வலம் வந்த வசந்த காலம் நினைவுக்கு வருகிறது... நன்றி ஹிஜாஸ் மைந்தனுக்கு...
புனித ரமழானே....நீ
பரிவுடன் பரிமாறும் போது
பசி கூட ருசிக்கிறது....
தாகத்தை விரும்பி
தவமிருக்கிறது நாக்குகள்!
இருபத்து மூன்றாண்டு
இறங்கிய நல் வேதத்தின்
இனிய துவக்கம் நீ!
அல்லவை கருக்கி
நல்லதைப் பெருக்கும்
அழகிய இயக்கம் நீ!
எனக்கொரு வரம் வேண்டும்
எழில் மிகு ரமழானே....
வருகின்ற மறுமையிலே
வள்ளல்நபி நாயகத்தின்
கரம் கோர்த்து நடந்திடவே
இறைவனிடம் நற்சாட்சி
பகர்வாயா அருள் பூக்கும்
புண்ணியமே..ரமழானே!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross